கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் வைரமுத்து வழங்கிய ‘தமிழாற்றுப்படை’ காணொலி!

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் வைரமுத்து வழங்கிய  ‘தமிழாற்றுப்படை’   காணொலி!

தமிழ் நெடும்பரப்பில் பேரொளியாக வாழ்ந்து மறைந்த மூவாயிரம் ஆண்டுகால ஆளுமைகளை வரிசைபடுத்தி ‘தமிழாற்றுப்படை’ மூலம் ஆவணப்படுத்தியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. புத்தகத்தோடு நின்றுவிடாமல் காணொளியாக்கும் பெரும்முயற்சியில் இறங்கியுள்ளது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி.

தமிழின் மிக முக்கிய முயற்சியான தமிழாற்றுப்படையின் ஒவ்வொரு அத்தியாங்களையும் அழகான காணொளியாக வாரம்தோறும் ஒளிபரப்பி வருகிறது கலைஞர் செய்திகள் தொலைக் காட்சி. வைரமுத்துவின் கம்பீர தமிழ் இந்நிகழ்ச்சிக்கு வலு சேர்க்கிறது. வாரம்தோறும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘தமிழாற்றுப்படை’ தமிழ் சமூகத்திற்கு பெரும் பொக்கிஷம்.

வெறும் தகவல்களாக மட்டுமல்லாமல் தற்கால தொலைக்காட்சி மரபுகளை கடந்து பிரம்மிப்பை தருகிறது ஒவ்வொரு காணொளியும். ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஐம்பத்திற்கும் மேற்பட்ட ஓவியங்கள் அலங்காரம் செய்கிறது. சிக்கனலில் நிற்க மனமில்லாமல் வீட்டுக்கு ஓடி வரும் இளைஞர்கள் சற்று நின்று நிதானித்து இந்நிகழ்ச்சியை ரசித்து பார்க்கலாம். தமிழ் ஆளுமைகளின் பெருமையை தெரிந்து கொள்ளலாம்.

தொல்காப்பியர்-திருவள்ளுவர் என சங்ககால புலவர்களில் இருந்து தனது பயணத்தை தொடங்கி யுள்ள வைரமுத்து உலக இலக்கியத்தையும் துணைக்கு அழைத்துள்ளார். அனால் அவர்களை நம் புலவர்களோடு ஒப்பிடவில்லை. நம்மவர்களை அவர்களோடு ஒப்பிட்டுப்பார்க்கிறார். திருமூலர், பாரதியார்,பெரியார்,அண்ணா,கலைஞர் போன்ற ஆளுமைகள் தமிழையும்,தமிழர்களையும் உலக அரங்கின் முதல் வரிசையில் உட்கார வைத்தார்கள் என்பதை தகுந்த ஆதாரங்களோடு சொல்கிறது இந்த தமிழாற்றுப்படை.

நுறு ஆண்டுகள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழையும், தமிழர்களின் பெருமைகளையும் தன மார்பில் சுமந்துகொண்டு உலகம் முழுக்க அகிம்சை வழியில் அழகியலோடு படையெடுத்து செல்லும் இந்த ‘தமிழாற்றுப்படை’ வாரம்தோறும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Related Posts

error: Content is protected !!