கைலா விமர்சனம்!

கைலா விமர்சனம்!

தமிழ் என்றில்லை.. உலக அளவில் அன்றாடம் நூற்றில் ஒருவர் பேசிக் கொண்டோ அல்லது யோசித்துக் கொண்டோ இருக்கும் விஷயங்களில் ஒன்று பேய்.. பேய் என்ற ஒன்று இருக்கிறதோ இல்லையோ வாரந்தோறும் நாவலாக அல்லது படமாக வந்து ஜனங்களை இம்சைப் படுத்துவதும் குறைவில்லாமல் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் அறிமுக இயக்குநர் பாஸ்கர் சீனுவாசன் இயக்கத்தில், அறிமுக நடிகை தானா நாயுடு நடிப்பில் ‘கைலா’ என்ற பெயரில் ஒரு புது வகையான பேய் படம் என்ற போர்வையில் ஒரு தமிழ்படம் ரிலீஸாகி இருக்கிறது..!

கதை ரொம்ப சிம்பிள்தான்.. அதாவது சென்னை ஈ சி ஆர்-ரில் இருக்கும் பங்களா ஒன்றின் வாசல் அருகே தொடர்ந்து விபத்துகள் நடைபெறுகின்றன. போலீசார் இவற்றை விபத்துகள் என்றே விசாரணையை முடிக்கிறார்கள். அந்த பகுதி மக்களோ ஆவி தான் கொலை செய்வதாக கூறுகிறார் கள். அதே சமயம் பேய்கள் குறித்து ஆராய்ச்சி செய்து கதை எழுதி வரும் தானா நாயுடுவுக்கு மட்டும் அவை கொலைகளாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. குறிப்பாக அவர் எழுதும் கதையில் வரும் கதாபாத்திரங்கள் தான் கொல்லப்படுகிறார்கள் என்பதும் கொலைகள் எல்லாம் ஒரே தேதியில் தான் நடக்கிறது என்றும் சந்தேகம் ஏற்படுகிறது. அத்துடன் காவல் துறை அதிகாரி யான அன்பாலயா பிரபாகரன், அதன் பின்னணியில் உள்ள ரகசியத்தை கண்டுபிடிக்கும் முயற்சி யில் ஈடுபடுகிறார். இறுதியாக இந்த மர்ம கொலைகளின் ரகசியம் என்ன? என்பதுதான் படத்தின் கதை.

அறிமுக நாயகி தானா நாயுடு, எல்லாம் காட்சிகளிலும் ஒரே மாதிரியான எக்ஸ்பிரனைக் காட்டி காண்போரை சலிப்படைய செய்து விடுகிறார். அதே சமயம் இந்த படத்தை இயக்கி வில்லனாகவும் நடித்திருக்கும் பாஸ்கர் சீனுவாசனுக்கு வில்லனுக்கு தேவையான அத்தனை அமசங்களும் நிறைவாக இருக்கிறது. அவருடைய தோற்றமும், பார்வையுமே தமிழ் சினிமாவுக்கு போதுமானதாக இருக்கிறது.

கெளசல்யா, குழந்தை நட்சத்திரம் கைலா, அன்பாலயா பிரபாகரன் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரது கதாபாத்திரமும் கச்சிதமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கேமராவை கையாண்டிருக்கும் பரணி செல்வம் மூலம் திகில் படத்திற்கு தேவையான அனைத்தையும் நிறைவாக வந்திருக்கிறது. ஸ்ரவனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை ..ஸாரி ஓசை நம்மை கொஞ்சம் திகிலடைய செய்கிறது.

பேய் படம் என்பதையும் தாண்டி இது மர்ம படம் என்பதைப் புரிந்து கைலா-வை பார்க்கும் ரசிகர்கள் அடுத்து என்ன நடக்கும், என்ற எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தும் விதமாக இயக்குநர் பாஸ்கர் சீனுவாசன் திரைக்கதை அமைத்திருக்கிறார். தொடர் கொலைகளின் பின்னணி என்னவாக இருக்கும், என்ற சஸ்பென்ஸை க்ளைமாக்ஸில் உடைப்பது, எதிர்பாராத திருப்புமுனை.

ஆனாலும் பட்ஜெட் காரணமாக திரைக்கதைக்கு தேவையான நிஜமான விஞ்ஞானப்பூர்வம் உள்ளிட்ட இன்னும் சில விஷயங்களை அலசி படத்தில் எடுக்க முடியாதது போல் சில குறைபாடுகள் இருந்தாலும், தான் சொல்ல வந்ததை இயக்குநர் நேர்த்தியாகவே சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில் கைலா தமிழ் சினிமா கணக்கில் இன்னொரு படம்

மார் 2.25 / 5

error: Content is protected !!