அரைக்கப் பட்ட ராஜேஷ் மசாலாதான்.. என்றாலும் = “கடவுள் இருக்கான் குமாரு!”- – AanthaiReporter.Com

அரைக்கப் பட்ட ராஜேஷ் மசாலாதான்.. என்றாலும் = “கடவுள் இருக்கான் குமாரு!”-

சும்மா சுற்றிக் கிடந்த ஜி வி பிரகாசு ஏதேச்சையாக கிருத்துவரான கயல் ஆனந்தியைப் பார்க்க பழக நேர அது காதலாக முடிய காதல் கனிந்து கத்திரிக்காய் சந்தைக்கு வரும் போது வில்லனாக வருபவர் ஆனந்த்தியின் தந்தை எம் எஸ் பாஸ்கர் … அவர் நிர்ணயித்த கல்யாணத்திற்கான விலை மிகவும் அநியாயமாக அக்கிரமமாக இருக்க கந்தலாகிறது காதல் .. போதாக்குறைக்கு பெட்ரோல் ஊத்துகிறார் பேசுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தும் ஊர்வசி …. காதல் பிரிந்தாலும் வேறு ஒரு நாயகி நிகில் கல்ராணியுடன் பிரகாசு திருமணம் நிச்சயமாகிறது …திருமணத்திற்கு முன் நண்பர்களுடன் பார்ட்டி என சொல்லி பாண்டிச்சேரிக்கு செல்கிறார்கள் பிரகாசும் நண்பன் ஆர் ஜே பாலாஜியும் … பாண்டியில் இருந்து சென்னை வரும் போது லஞ்சப் புகழ் காவல் அதிகாரி பிரகாஷ் ராஜிடம் மாட்டுகிறார்கள் இருவரும் ………….!

kik nov 18

இப்படி துவங்கும் இப்படத்தின் சிறப்பம்சம் பிரகாஷ் ராஜ் .. கூடுதல் சிறப்புகள் ஆர் ஜே பாலாஜீ … ரோபோ சங்கர் சிங்கம் புலி நிகில் கல்ராணி ஆனந்தி நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் ஜி வி பிரகாஷ் …சக்தி ஒளிப்பதிவும் ஜி வி இசையும் கலக்கல் ….

டாஸ்மாக் சரக்குக்கு பதில் பாண்டிச்சேரி சரக்கு … உதய நிதி ஆர்யா கார்த்தி இவர்களுக்கு பதில் ஜி வி … சந்தானத்துக்கு பதில் ஆர் ஜே பாலாஜீ …பள பளா கிளு கிளு என இரண்டு நாயகிகள் கடைசியில் சிறப்பு தோற்றத்தில் வரவேண்டிய கதா நாயகனாக ஜீவா …என வழக்கம் போல அரைக்கப் பட்ட ராஜேஷ் மசாலா… ஆனால் புளிக்கும் முன் சூடாக புது பாத்திரங்களில் தரப்படும் உணவுப் பண்டம்தான் கிக்

படம் பார்க்க வருபவர்களுக்கு சிறிது நகைச்சுவை உணர்வு இருந்தாலும் போதும் அதை பொங்க விட்டு மனம் விட்டு சிரித்து 1000 கவலைகள் இருந்தாலும் 2000 மகிழ்ச்சியுடன் நிம்மதியாக வெளியே வரலாம்ஆர் ஜே பாலாஜீ அட்டகாசம் சந்தானம் கதா நாயகன் ஆகிவிட்டாரே சூரி சூப்பர் சம்பளம் கேட்கிறாரே வடிவேலுவை டீல் பண்ணவே முடியலியே விவேக் ஜி விக்கெல்லாம் நண்பனாக பார்க்க முடியாதே என்கிற கவலைகளுக்கு மருந்தாக விருந்தாக வந்து விட்டார் பாலாஜீ

பிரகாஷ் ராஜ் திரையில் அதகளம் செய்கிறார் .. காமெடியும் கம்பீரமும் கலந்த கலவை புதிதல்லவா .. இப்படத்தின் வெற்றிக்கு ஆதாரப் புள்ளியே இவரதான் ..நிகில் ஒரு குட்டி குஷ்பூ ஆனந்தி அனுபவக் குறைவு வெளிபட்டாலும் அம்சமான முகத்தால் ஒப்பேற்றுகிறார்.

ரோபோவும் சிங்கம் புலியும் ராஜேந்திரனும் ஓ ஓ இல்லை ஆனாலும் அந்தந்த நிமிடம் ஓகே தான் … எம் எஸ் பாஸ்கரும் ஊர்வசியும் மனோபாலாவும் இப்படி அள்ளிக் கொட்டாவிடில் பிரகாஷ் ராஜ் வரும் வரை செயற்கை சுவாசமாகி இருக்கும் …. நடிப்பு ராட்சசர்கள் …

இரண்டாம் பகுதியில் கதையை நகர்த்தி ரெட்டை நாயகிகளுடன் பாடல் காட்சிகளைப் புகுத்தி எப்படி எப்படியோ சுற்றி ஊர் வந்து சேர்கிறது கதை ….சிரிக்க வைக்கும் கலை தெரிந்த ராஜேஷ் இன்னமும் சற்று முனைந்திருந்தால் டிரிபிள் ஓகே ஒகே ஆகியிருக்கும் … இப்போ ஒகேதான் …

ஜி வி பிரகாஷ் குமார் என்கிற இசை அமைப்பாளர் தொழில் சுத்தம், ஆனால் அந்த நடிகர் ஜி வி பிரகாஷ் குமார் ??/ ?? சரியான மச்சக்காரர் ஒன்றுமே செய்யாமல் கோப்பையை தனதாக்கிக் கொள்கிறார். இன்னமும் பல படங்களையும்தான் டி சிவா என்கிற தயாரிப்பாளரும் அம்மா கிரியேசன்ஸ் நிறுவனமும் தரமான படங்களையே தருபவர்கள் .. இந்த முறை காலத்துக்கேற்றார் போல காசு அள்ளும் படமாக கிக் … அவரது அனுபவம் நடிகர்கள் தேர்விலும் பரபரப்பை ஏற்படுத்தும் வணிக உத்திகளிலும் தெரிகிறது..இவரால்தான் 350 திரை அர்ங்குகளில் தினசரி 1000 காட்சிகளாக உலகமெங்கும் திரைக்கு வருகிறான் குமாரு..

கடவுள் இருக்கான் குமாரு … 2000 மா கொட்டும் குமாரு

வெங்கட் சுபா