கபாலி டீசரில் ஏடிஎம்கே மினிஸ்டர்களைக் கிண்டலடிக்கிறாரா ரஜினி? – AanthaiReporter.Com

கபாலி டீசரில் ஏடிஎம்கே மினிஸ்டர்களைக் கிண்டலடிக்கிறாரா ரஜினி?

கலைப்புலித் தாணு தயாரிப்பில் ரஜினி – இயக்குநர் பா. இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படம் – கபாலி. இந்தப் படத்தில் சென்னையைச் சேர்ந்த தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். ராதிகா ஆப்தே, தினேஷ், தன்ஷிகா, கலையரசன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
kabali may 1

கபாலி படம் மே மாதம் கடைசி வாரம் அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் வெளியாகலாம் என்று சமீபத்தில் தகவல் தெரிவித்தார் ரஜினி. இந்நிலையில் கபாலி படத்தின் டீசர், யூடியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. சுமார் ஒரு நிமிஷம் ஓடும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

பரபரப்பான இசையின் பின்னணியில் ரஜினி அறிமுகம் ஆகும் காட்சியும், அவர் தாதாவாக மாறிய காரணத்தை விளக்கி, ‘தமிழ் படங்கள்ல, இங்க மரு வச்சிகிட்டு, மீசையை முறுக்கிக்கிட்டு, லுங்கியை கட்டிக்கிட்டு, நம்பியார்..’ ஏய் கபாலி’ ., அப்டின்னு சொன்ன உடனே, குனிஞ்சி ’சொல்லுங்க எஜமான்’..-னு அப்டி வந்து நிப்பானே, அந்த மாதிரி கபாலி-ன்னு நினைச்சியாடா,?’ …..என்ற இடங்களில் ரஜினி வெளிப்படுத்தும் பாவனைகளை கோலிவுட்டில் சிலாகித்து பேசுகிறார்கள். அதே சமயம் இந்த டயலாக் அதிமுக மந்திரிகளை கிண்டலடித்து ரஜினியே சேர்த்து பேசியதாக்கும் என்றும் கிசுகிசுக்கிறார்கள். எப்படியோஇந்த டீசர் வெளியான ஒருமணி நேரத்துக்குள் சுமார் 90 ஆயிரம் லைக்-களை வாரிகுவித்துள்ளது