இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் காலியாக உள்ள 64 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Junior Assistant. மொத்த இடங்கள்: 64 (பொது-45, ஒபிசி-8, எஸ்சி-4, எஸ்டி-7). சம்பளம்: ரூ.12,500-28,500.

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல்/ பயர் ஆகிய பாடங்களில் மூன்றாண்டு டிப்ளமோ அல்லது 50% மதிப்பெண் களுடன் பிளஸ் 2 தேர்ச்சி. கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு பூர்த்தியாகியிருக்க வேண்டும்.

உடற்தகுதி: உயரம்- ஆண்களுக்கு 167 செ.மீ., பெண்களுக்கு 157 செ.மீ. மார்பளவு- ஆண்களுக்கு 81 செ.மீ., 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30.9.2018 அன்று 18 முதல் 30க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியின ருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் ஆந்தை வேலைவாய்ப்பு என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.12.2018.

error: Content is protected !!