வலி நிவாரணி என்ற பெயரில் போதை வியாபாரம் செய்த ஜான்சன் & ஜான்சனுக்கு ஃபைன்!

வலி நிவாரணி என்ற பெயரில் போதை வியாபாரம் செய்த ஜான்சன் & ஜான்சனுக்கு ஃபைன்!

நமக்கு எப்போதெல்லாம் தலைவலி, உடல் வலி, முதுகுவலி, மூட்டுவலி என ஏற்படுகிறதோ அப்போது நாம் வலி மாத்திரைகளை சாப்பிடுகின்றோம். சிறிது நேரத்தில் வலியும் மறைந்து விடுகிறது. நோய் நீங்கிவிட்ட திருப்தியில் நாமும் மற்ற வேலைகளை பார்க்கத் தொடங்கி விடு கின்றோம்.வலி நிவாரணிகள் குடலைப் பாதுகாக்கும் Mucus Membrane என்கிற லேயரை அரித்து அல்சரை உண்டாக்கும். வயிற்று எரிச்சல், நெஞ்செரிச்சல், வாந்தி என்று சாதாரணமாக ஆரம்பிக் கிற அறிகுறிகள் நாளடைவில் இரைப்பை அழற்சி, வயிறு புண், பக்கவாதம், மலட்டுத் தன்மை, மாரடைப்பு, கல்லீரல், சிறுநீரக செயலிழப்பு என்று பெரிய விளைவுகளை ஏற்படுத்தி வி்டும். என்ன வகையான வலி நிவாரணிகளைப் பயன்படுத்துகின்றீர்கள், எப்படி பயன்படுத்துகின்றீர்கள் என்பதைப் பொறுத்து விளைவுகளும் மாறும். இந்த வலி நிவாரணிகளில் பாதுகாப்பானவை என்று எதுவும் இல்லை.

இந்நிலையில் வலி நிவாரணிக்கு பலர் அடிமையாகும் வகையிலான மருந்துகளை சந்தைப் படுத்தி யதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு அமெரிக்காவின் ஆக்லஹாமா நீதிமன்றம் 4 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.ஜான்சன் அண்ட் ஜான்சனின் வலி நிவாரணி சந்தைப்படுத்தும் நடைமுறைகளால் பலர் அதன் மருந்துக்கு அடிமையாக நேரிட்டதாக ஆக்லஹாமா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும் உள்ளூர் நிர்வாகம், மாகாண அரசுகள், தனிநபர்கள் என ஆயிரக்கணக்கான மனுக்கள் தாக்கலாகின.இதையடுத்து, வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், ஜான்சன் அண்ட் ஜான்சன் 4 ஆயிரம் கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது தனி ரிப்போர்ட்.

Related Posts

error: Content is protected !!