+2 முடித்தவர்களுக்கு இந்தியக் கடற்படையில் மாலுமி பணி வாய்ப்பு! – AanthaiReporter.Com

+2 முடித்தவர்களுக்கு இந்தியக் கடற்படையில் மாலுமி பணி வாய்ப்பு!

இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் ஒவ்வோர் ஆண்டும் பணியில் சேர்க்கப்படுகிறார்கள். எழுத்துத் தேர்வு, உடல் தகுதி, மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட பல தேர்வுகள் அடிப்படையில் பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டும் பயிற்சியில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது செய்லர் (எஸ்.எஸ்.ஆர். – ஆகஸ்ட் 2019) என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் 2500 பேரும், செய்லர் (ஏ.ஏ. – ஆகஸ்ட் 2019) என்ற பயிற்சிப் பிரிவில் 500 பேரையும் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் உத்தேசமாக 3 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பிளஸ்-2 படித்தவர்களை இந்தப் பயிற்சியில் சேர்த்து மாலுமியாக பயிற்சியளித்து பணியமர்த்தப்படுவார்கள். இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்கள் இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.

கல்வித் தகுதி : 

மேல்நிலைக் கல்வி (10+2 முறையில்) அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருப்பதுடன், இந்தப் பாடங்களில் 60 சதவீதத்திற்கும் குறைவில்லாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 

விண்ணப்பதாரர்கள் 1.8.1998 மற்றும் 31.7.2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே.

தேர்வு செய்யும் முறை : 

எழுத்துத் தேர்வு, உடல்உறுதித் திறன் தேர்வு, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 22 வாரகால பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். இவர்கள் மாஸ்டர் சீஃப் பெட்டி ஆபீசர்-1 பணி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற முடியும். இதற்கான தேர்வு வருகிற 2019 பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

உடல் தகுதி : 

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 மற்றும் கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேவையான இடத்தில், புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசிநாள் 30.12.2018.

மேலும் விரிவான விவரங்களைத் தெரிந்துகொள்ள ஆந்தை வேலைவாய்ப்பு   என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.