தமிழ்நாடு போலீசில் சேர விருப்பமா? – AanthaiReporter.Com

தமிழ்நாடு போலீசில் சேர விருப்பமா?

தமிழக காவல் படையில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வா ணையம் பொதுத் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. தற்போது சப்-இன்ஸ்பெக்டர் (விரல் ரேகை) பிரிவில், 202 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: 2018 ஜூலை 1 அடிப்படையில் 20 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இவர்கள் பத்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் ; ரூ. 500.

தேர்வு மையங்கள்: தேர்வு மையங்கள் பற்றிய அறிவிப்பினை ஹால் டிக்கெட்டில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் திறனறியும் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.

கடைசி நாள்: 2018 செப்., 28.

விபரங்களுக்குஆந்தை வேலைவாய்ப்பு