டி.ஐ.ஐ.சி., (டிக்) என்ற பெயரால் அறியப்படும் நிறுவனத்தில் ஜாப்! – AanthaiReporter.Com

டி.ஐ.ஐ.சி., (டிக்) என்ற பெயரால் அறியப்படும் நிறுவனத்தில் ஜாப்!

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் நம் அனைவ ராலும் டி.ஐ.ஐ.சி., (டிக்) என்ற பெயரால் அறியப்படுகிறது. 1949ல் நிறுவப்பட்டது.  தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கான கட்டமைப்பை உருவாக்குவது இதன் பணி. தொழில் நிறுவ னங்கள் இடம் வாங்க, மெஷினரிகளை வாங்க, கட்டடம் கட்டுவது போன்றவற்றிற்கான நிதி உதவியை வழங்குகிறது. இதில் 43 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்: சீனியர் ஆபிசர் – பினான்ஸ் பிரிவில் 23, சீனியர் ஆபிசர் – டெக்னிக்கல் பிரிவில் 20ம் சேர்த்து மொத்தம் 43 இடங்கள் காலியாக உள்ளன.

வயது: 2018 ஜூலை 1 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: நிதிப் பிரிவுக்கு விண்ணப்பிப் பவர்கள் சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., எம்.பி.ஏ.,வுடன் முது நிலைப் பட்டப் படிப்பு, ஐ.ஐ.எம்., எக்ஸ்.எல்.ஆர்.ஐ., போன்ற கல்வி நிறுவனங்கள் மூலமாக நிதிப்பிரிவில் முதுநிலை டிப்ளமோ படிப்பு போன்ற ஏதாவது ஒன்றை முடித்திருக்க வேண்டும். டெக்னிக்கல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., பி.டெக்., ஏ.எம்.ஐ.இ., போன்ற ஏதாவது ஒரு படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு பதவிகளுக்குமே மாநில அல்லது மத்திய நிறுவனங்களில் நிதிப்பிரிவு, வங்கித்துறை, பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் ஏதாவது ஒன்று போன்ற ஏதாவது ஒன்றில் ஒரு வருடம் பணியாற்றிய அனுபவம் தேவைப்படும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 2016 ஜூன் 2.

விபரங்களுக்கு:  ஆந்தை வேலைவாய்ப்பு