ஆவின் – விருதுநகர் கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு! – AanthaiReporter.Com

ஆவின் – விருதுநகர் கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள டெக்னீசியன், ஓட்டுநர், அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி யானவர்களிடம் இருந்து  ஆஃப்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: The Virudhunagar District Co-Op. Milk Producers’ Union Ltd.

மொத்த காலியிடங்கள்: 11

பணியிடம்: விருதுநகர்

பணி: Junior Executive – 01
சம்பளம்: மாதம் ரூ.19500 – 62000

பணி: Technician – 01
பணி: Driver – 08
பணி: Office Assistant  – 01
சம்பளம்: மாதம் ரூ.15700 – 50000

கல்வித் தகுதி: 8, 10,  இளங்கலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப் பட்டுள்ள அறிவிப்பை படித்து, பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager, Virudhunagar District Cooperative Milk Producers Union Ltd., Srivilliputtur Dairy, Madurai Road, Meenakshipuram(P.O), Srivilliputtur – 626 125.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  ஆந்தை வேலைவாய்ப்பு என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.02.2020