இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை! – AanthaiReporter.Com

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை!

நமது நாட்டின் எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எனப்படும் ஐ.ஓ.சி.எல்., முக்கிய நிறுவனம். இதில் டெக்னிக்கல் மற்றும் நான்-டெக்னிக்கல் பிரிவுகளில் காலியாக உள்ள 354 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

காலியிட விபரம்: மார்க்கெட்டிங் பிரிவிலான மேற்கண்ட இடங்கள் தென் மண்டலத்தைச் சார்ந்த காலியிடங்கள். இவை தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நிரப்பப்பட உள்ளன. காலியிட விபரம், வயது, கல்வித் தகுதி போன்ற விபரங்களை இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்த்து அறியலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி முறை: மேற்கண்ட பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2018 செப்., 21.

விபரங்களுக்குஆந்தை வேலைவாய்ப்பு