பேங்க் ஜாப் ரெடி! – ஐபிபிஎஸ் அறிவிப்பு!! – AanthaiReporter.Com

பேங்க் ஜாப் ரெடி! – ஐபிபிஎஸ் அறிவிப்பு!!

நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியை ‘ஐ.பி.பி.எஸ்.,’ (Institute of Banking Personnel Selection ) தேர்வாணையம் ஏற்றுள்ளது. இது 2011 முதல் ‘கிளார்க்’, ‘புரபேஷனரி ஆபிசர்ஸ்’, ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ்’, கிராம வங்கிகளுக்கான ‘உதவியாளர்’ மற்றும் ‘அதிகாரி’ காலி பணியிடங்களை எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்து வருகிறது.  இந்நிலையில் 2019 – 2020ம் ஆண்டுக்கான கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெ ளியிட்டுள்ளது. இதன் மூலம் தேசிய வங்கிகளில் 7,275 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழகத்தில் 792 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது : 2018 செப்.,1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 20 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய படிப்பும் கூடுதலாகத் தேவைப்படும்.

தேர்ச்சி முறை : ஐ.பி.பி.எஸ்., நடத்தும் எழுத்துத் தேர்வு பிரிலிமினரி தேர்வு மற்றும் மெயின் தேர்வு என்று இரண்டு நிலைகளாக இருக்கும். பிரிலிமினரி தேர்வில் ஆங்கிலம் பிரிவில் 30ம், நியூமெரிக்கல் எபிலிடி மற்றும் ரீசனிங் எபிலிடியில் தலா 35 கேள்விகளும் இருக்கும். இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், மெயின் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
இதில் ஜெனரல் அவேர்னஸ் பிரிவில் 50, ஆங்கிலம் பிரிவில் 40, ரீசனிங் எபிலிடி & கம்ப்யூட்டர் ஆப்டியூடு பிரிவில் 50, குவாண்டிடேடிவ் ஆப்டியூடு பிரிவில் 50ம் கேள்விகள் இருக்கும். இதிலும் வெற்றி பெறுபவர்கள் மதிப்பெண் அடிப்படையில் இறுதியாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 600.

கடைசி நாள் : 2018 அக்., 10.

விபரங்களுக்கு ஆந்தை வேலைவாய்ப்பு