அண்ணா பல்கலையில் வேலை! – AanthaiReporter.Com

அண்ணா பல்கலையில் வேலை!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தில் இன்ஜினியரிங், டெக்னாலஜி மற்றும் இவை சார்ந்த துறைகளை மேம்படுத்தும் நோக்கத்தில் 1978ல் நிறுவப்பட்டது. தொழில்நுட்பக் கல்வியில், தற்போது தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் இப்பல்கலையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள் : லைப்ரரி புரொபஷனல், ஐ.டி., புரொபஷனல், வெப் டிசைனர்/புரொகிராமர் ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி : லைப்ரரி புரொபஷனல் பிரிவுக்கு, ஏதாவது ஒரு பிரிவில் முது நிலைப் பட்டப் படிப்புடன் எம்.எல்.ஐ.எஸ்., அல்லது எம்.எம்.சி., லைப்ரரி சயின்ஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் அகடமிக் லைப்ரரி, ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் பிரிவில் குறைந்த பட்சம் 3 வருட அனு பவம் பெற்று இருக்க வேண்டும். ஐ.டி. புரொபஷனல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ., அல்லது ஐ.டி.,யில் முடித்திருக்க வேண்டும். இத்துடன் துறை சார்ந்த அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். வெப் டிசைனர் / புரொகிராமர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., பி.டெக்., எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது எம்.சி.ஏ., படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். இத்துடன் சில குறைந்தபட்ச முன் அனுபவமும் தேவைப்படும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்துடன் உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Director, University Library, Anna University, Chennai- 025 

கடைசி நாள் : 2017 அக்., 13. 

விபரங்களுக்கு ஆந்தை வேலை வாய்ப்பு