இந்திய சரக்கு நடைபாதை கழகத்தில் வேலைவாய்ப்பு! – AanthaiReporter.Com

இந்திய சரக்கு நடைபாதை கழகத்தில் வேலைவாய்ப்பு!

தேசத்தின் உயிர்நாடி எனப்படும் இந்திய ரயில்கள் தினமும் சுமார் 21 லட்சம் பேர்களைத் தாங்கிச் செல்கிறது. இந்தியா முழுவதும் 7000 ரயில் நிலையங்கள் இருக்கின்றன. ரயில் நிலையங்கள் வெறும் இடங்கள் அல்ல, அவை, பல பேர்களின் நினைவுகளை புதைத்து வைத்திருக்கும், வரலாற்றுச் சிறப்பை ஒளித்து வைத்திருக்கும் நினைவுச் சின்னங்கள். இப்பேர்பட்ட ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சரக்கு நடைபாதை கழகத்தில் (டி.எப்.சி.சி.ஐ.எல்., ) காலியாக உள்ள 54 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: அசிஸ்டென்ட் மேனேஜர் (நிதி) 17, அசிஸ்டென்ட் மேனேஜர் (ஐ.டி.,) 13, ஜூனியர் மேனேஜர் (எச்.ஆர்.,) 4, எக்சிகியூட்டிவ் (நிதி) 13, எக்சிகியூட்டிவ் (எச்.ஆர்.,) 5 எக்ஸ்கியூட்டிவ் (ஐ.டி.,) 2 என 54 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பதவி வாரியாக கல்வித்தகுதி மாறுபடுகிறது.

வயது: அசிஸ்டென்ட் மேனேஜர் 18 -30, ஜூனியர் மேனேஜர் 18 -27, எக்ஸ்கியூட்டிவ் 18 -30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு, உடல் பரிசோதனை அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

தேர்வுக்கட்டணம்: ரூ. 1,000.

கடைசிநாள் : 15.3.2020

விபரங்களுக்குஆந்தை வேலைவாய்ப்பு