பெல் நிறுவனத்தில் ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! – AanthaiReporter.Com

பெல் நிறுவனத்தில் ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

பெல் எனப்படும்  பாரத் எலக்ட் ரானிக்ஸ் லிமிடெட்  நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் துறை யில் ராணுவத்திற்கான தேவைகளை நிறைவேற்றும் பொருட்டே முதலில் நிறுவப்பட்டது. ஆனால் பின் நாட்களில் இதன் சேவைகள் விரிவு படுத்தப்பட்டு தற்போது எலக்ட் ரானிக்ஸ் துறையில் முக்கியமான நிறுவன மாக திகழ்கிறது.  இதன் பெங்களூரு கிளையின் சார்பாக கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மையங்களில் காலியாக இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர், எலக்ட்ரோபிளேட்டர், ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷன் ஆகிய பிரிவிலான அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

வயது: விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 2015 அக்., 1க்குப் பின்னர் என்.சி.வி.டி., எஸ்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: மைய வாரியாக நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும். ஒவ்வொரு மையத்திற்கும் வெவ்வேறு தேதிகளில் இது நடத்தப்பட உள்ளது. முழுமையான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும். நேர் காணலுக்கு செல்லும் போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஐ.டி.ஐ., ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும்.

ஸ்டைபண்டு மற்றும் பயிற்சிக் காலம்: ஒரு வருட பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் வரை ஸ்டைபண்டாக பெற முடியும்.

விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு