தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்கில் ஆபிசர் ஜாப் தயார்! – AanthaiReporter.Com

தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்கில் ஆபிசர் ஜாப் தயார்!

துாத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் துறை வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது. இவ்வங்கியில் காலியாக உள்ள விவசாய அதிகாரி, சி.ஏ., , மார்க்கெட்டிங் ஆபிசர், தலைமை பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது : 2017 ஜூன் 30 அடிப்படையில் விவசாய அதிகாரி பதவிக்கு 30 வயதுக்குக்கு மிகாமலும், சி.ஏ., பதவிக்கு 35க்கு மிகாமலும், மார்க்கெட்டிங் ஆபிசர் பதவிக்கு 40க்கு மிகாமலும், தலைமை பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

அனுபவம் : அனைத்து பதவிகளுக்கும் 2 – 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். மார்க்கெட்டிங் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய். மற்ற 3 பதவிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 2017 அக்., 3.

விபரங்களுக்கு : ஆந்தை வேலை வாய்ப்பு