ரெப்கோ பேங்க்-கில் ஜூனியர் அசிஸ்டென்ட் கிளார்க் ஜாப் தயார்! – AanthaiReporter.Com

ரெப்கோ பேங்க்-கில் ஜூனியர் அசிஸ்டென்ட் கிளார்க் ஜாப் தயார்!

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் ரெப்கோ வங்கி 1969ல் நிறுவப்பட்டது. இலங்கை மற்றும் பர்மாவிலிருந்து வந்த அகதிகளின் நன்மைக்காக நிறுவப்பட்ட இந்த வங்கி தற்போது பல்வேறு நிதிப்பிரிவுகளில் குறிப்பிடத்தக்க பணியாற்றி வருகிறது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகளும் உள்ளன. இந்த வங்கியில் ஜூனியர் அசிஸ்டென்ட்/கிளார்க் பிரிவில் காலியாக இருக்கும் 40 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

வயது: 30.4.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப் பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் என்ற வகையில் இருக்கும்.

தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700/-ஐ இந்த பதவிக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 20.6.2019

விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு