இந்தியன் பேங்க்-கில் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com

இந்தியன் பேங்க்-கில் ஜாப் ரெடி!

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள மேலாளர் தரத்திலான 145 அதிகாரி பணியிடங் களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து மே 2க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 145

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Specialist Officers 
துறை: Information Technology Department / Digital Banking Department
1. Assistant General Manager – 01
2. Chief Manager – 09
3. Manager -13
4. Senior Manager -08

துறை: Information Systems Security Cell
1. Assistant Manager – 01
2. Manager – 05
3. Senior Manager – 01

துறை: Treasury Department 
1. Manager – 02
2. Senior Manager – 11

துறை: Treasury Department 
1. Manager – 04
2. Senior Manager – 03

துறை: Security Department 
1. Manager – 55
2. Senior Manager – 20

துறை: Planning and Development Department 
1. Manager – 01
2. Assistant Manager – 01

துறை: Premises and Expenditure Department 
1. Manager – 04
2. Assistant Manager – 07

சம்பளம்: மாதம் ரூ.23,700 – 66,070

தகுதி: கணினி அறிவியல், கணினி அப்ளிகேசன், ஐடி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் டெலி கம்யூனிகேசன்ஸ், எல்க்ட்ரானிக்ஸ் இன்ஸ்ருமென்டேசன் போன்ற துறைகளில் பொறியியல் அல்லது தொழில்நுட்ப பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முதுநிலை பொறியியல் தொழில்நுட்பம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 20 முதல் 38க்குள் இருக்க வேண்டும். 45 வயதுடையவர்களுக்கு பணி உள்ளது. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மிகுதியான விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பித்திருந்தால் முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் அடுத்தகட்ட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianbank.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  ஆந்தை வேலைவாய்ப்பு என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.