செப்.30ம் தேதி வரை ரயில்கள் போக்குவரத்த்கு ரத்து!
இந்தி தெரிந்தால்தான் இந்தியரா? – கனிமொழியின் காட்டத்துக்கு மத்திய அரசு பதில்!
பெண் ஊழியர்களுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு.! திருநங்கைகளுக்கும் பொருந்தும்.!
இலங்கை பிரதமராக பதவியேற்றார் -மகிந்த ராஜபக்சே!
இ-பாஸ் வழங்க லஞ்சம்!- ஐகோர்ட் காட்டம்!
கடவுளே. உன் சொந்த தேசத்துக்குக்  கருணைக் காட்டக் கூடாதா?
தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!அமைச்சர், ஆட்சியர் பாராட்டு!
தரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி!
சொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்!
“‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்! – சாந்தனு ஹேப்பி!
வேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ!
நான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற படத்தைப் பாருங்கப்பூ- அப்புக்குட்டி!

ஜே.கே.ரித்திஷ் திடீர் மரணம்!

498
SHARES
1.4k
VIEWS

ஆறேழே படங்களில் நடித்தாலும் கோலிவுட் முழுக்க பிரபலமானவரும், முன்னாள் எம்.பி.,யுமான ஜே.கே.ரித்திஷ். 48 வயதே ஆன இவருக்கு இன்று மதியம் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். மறைந்த ஜே கே ரித்திஷ் க்கு 2 மகன், 1மகள். மகனுக்கு 11வயது 2வது மகனும் 8 வயது. மகளுக்கு 1 வயது கூட ஆகவில்லை என்பதும் சோகம்.

1973ல் இலங்கையின் கண்டியில் பிறந்த ரித்தீஷின் இயற்பெயர் சிவக்குமார். 70களின் பிற்பகுதியில் ராமநாத புரத்திற்குக் தன் பெற்றோருடன் குடிபெயர்ந்த ரித்தீஷ், சினிமாவின் மீது ஆர்வத்தில் 2007ஆம் ஆண்டில் கானல் நீர் படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்குப் பிறகு நாயகன், பெண் சிங்கம், எல்.கே.ஜி. ஆகிய படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவின் சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ரித்தீஷ், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.கவின் சத்தியமூர்த்தியைவிட 69 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

2011ஆம் ஆண்டில், அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் நிலம் வாங்கித் தருவதாகக்கூறி ஏமாற்றியதாக, அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.ஆனால், 2014ஆம் ஆண்டு ஏப்ரலில் ஜெயலலிதாவைச் சந்தித்த ரித்தீஷ். அவர் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைஞ்சார். இப்பக் கூட .ராமநாதபுரம் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக ஜே.கே. ரித்தீஷ் தற்போது பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்தார்

இந்நிலையில், இன்று மதியம், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் இறந்துவிட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, அவரது உடல் மருத்துவமனையில் இருந்து, அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கிடையே, சற்று நேரத்தில் அவர் கண் விழித்து பார்த்ததாகவும், அவர் உயிருடன் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால், அவரது மரணத்தில் குழப்பம் ஏற்பட்டது.

இரண்டாவது முறையாக அவரது உடலை பரிசோதித்த மற்றொரு மருத்துவமனை மருத்துவர்கள், ரித்திஷ் உயிர் இழந்ததை உறுதி செய்தனர். இதை அவரது உறவினர்களும் உறுதிபடுத்தியுள்ளனர். இதனால், ரித்திஷின் மரணத்தில் எழுந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. ரித்திஷ் க்கு 2 மகன், 1மகள். மகனுக்கு 11வயது 2வது மகனும் 8 வயது. மகளுக்கு 1 வயது கூட ஆகவில்லை.மனைவி பெயர் ஜோதி.

ரித்திஷ் மரணத்திற்கு, ரித்திஷின் மறைவுக்கு  இயக்குநர் பாரதிராஜா, நாசர், விஷால், நாசர் என்று திரையுலகினரும்,  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முக ஸ்டாலின் போன்றோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.