ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ வி. ஆர். எஸ்!

ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ  வி. ஆர். எஸ்!

ஜப்பான் நாட்டின் 125ஆவது மன்னரான அகிஹிட்டோ (வயது 83) வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார். ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு கடைசியாக 1817ஆம் ஆண்டு, கொகக்கு என்ற மன்னர்தான் பதவி விலகி உள்ளார். அதற்கு முன்னர் 2600 ஆண்டுகளுக்கு முன்புதான் ஒரு மன்னர் அங்கு பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 200 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மன்னர் அகிஹிட்டோ ஓய்வு பெறும் சூழல் நிலவிவுள்ளது.

அதிலும் அரசர் பதவி விலகுவதற்கான விதிகள் சட்டத்தில் இல்லை என்பதால், மன்னர் பதவி விலகுவதற்கான மசோதா கடந்த ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மன்னர் பதவி விலகுவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், மன்னர் அகிஹிட்டோ வரும்2019ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி ஓய்வுபெற உள்ளதாக பிரதமர் ஷின்சோ அபே இன்று அறிவித்துள்ளார்.

அகிஹிட்டோ பதவி விலகும் தேதியை முடிவு செய்வதற்காக நடத்தப்பட்ட இம்பீரியல் கவுன்சில் சிறப்பு கூட்டத்தில் ஒரு மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.மன்னர் பதவி விலகல் மற்றும் புதிய மன்னர் முடிசூட்டும் விழா ஆகிய நிகழ்வுகளை மக்கள் கொண்டாடும் வகையில் அரசு ஏற்பாடுகள் செய்யும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

மன்னர் அகிஹிட்டோ பதவி விலகிய மறுநாள் அவரது மூத்த மகனான பட்டத்து இளவரசர் நருஹிட்டோ (வயது 57) மன்னராக முடிசூட்டப்படுவார் என்றும் தெரியவந்துள்ளது. அப்போது மன்னர் அகிஹிட்டோ அமர்ந்த சாமந்திப் பூ அரசிருக்கையும் நருஹிட்டோவிடம் ஒப்படைக்கப்படும்.

Related Posts

error: Content is protected !!