அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு? ஜப்பான் பரிந்துரை!

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு? ஜப்பான் பரிந்துரை!

உலக நாடுகளை அச்சுறுத்திய வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகள் மற்றும் அந்நாட்டில் நிலவிய பதற்றமான சூழலை பேச்சு வார்த்தை மூலம் குறைத்ததற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என ஜப்பான் பரிந்துரை செய்துள்ளது.

வடகொரியா, அணு ஆயுதம் மூலம் கிழக்கு ஆசியாவில் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தல் இருந்தது. இதனால் கொரியா தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இந் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் தணிந்தது.

இதனால் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என ஜப்பானுக்கு, அமெரிக்கா கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று, டிரம்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே பரிந்துரைத்துள்ளார். இதனை வாஷிங்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அப்படி எல்லாம் நாங்க பரிந்துரைக்க வில்லை என்று ஜப்பான் பிரதமர் சொல்லி இருப்பதாகவும் தகவல் வருகிறது.

Related Posts

error: Content is protected !!