திமிங்கல வேட்டை – ஜப்பானில் மறுபடியும் அரங்கேற்றம்! – AanthaiReporter.Com

திமிங்கல வேட்டை – ஜப்பானில் மறுபடியும் அரங்கேற்றம்!

ஜப்பானில் பல நூற்றாண்டுகளாக திமிங்கலங்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. இரண்டாம் உலக போருக்கு பின் ஜப்பானில் மிகவும் வறுமையான சூழ்நிலை நிலவியபோது பெரும்பாலான மக்கள் திமிங்கலங்களை வேட்டையாடி உண்டனர். ஆனால் தற்போது திமிங்கலங்களை சாப்பிடும் வழக்கம் ஜப்பான் மக்கள் மத்தியில் வெகுவாக குறைந்துவிட்டது. இருப்பினும் ஆராய்ச்சி என்ற பெயரில் ஆண்டுதோறும் ஜப்பான் திமிங்கலங்களை வேட்டையாடி வருகிறது. ஆனால் சர்வதேச அழுத்தம் காரணமாக அதை நிறுத்தி வைத்திருந்த நிலையில் 31 ஆண்டுகளுக்கு பிறகு வர்த்தகத் திற்காக திமிங்கலங்களை வேட்டையாடுவதை ஜப்பான் மீண்டும் தொடங்கி உள்ளது.

ஜப்பானின் பாரம்பரியங்களுள் ஒன்றாக திமிங்கல வேட்டை கருதப்படுகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் வறுமையில் சிக்கிய ஜப்பான் மக்களுக்கு திமிங்கல வேட்டை முக்கிய பணியாக மாறியது. திமிங்கலத்தை உண்ணும் பழக்கமும் உருவானது. ஆனால் காலப்போக்கில் இது மறைந்தாலும் திமிங்கல வேட்டை தொடர்ந்து நீடிக்கிறது. அதேசமயம் அறிவியல் ஆராய்ச்சிக் காக ஜப்பான் அரசு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு திமிங்கலங்களை வேட்டையாடியது. பின்னர் அதன் இறைச்சி விற்பனை செய்யப்பட்டது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சர்வதேச அளவில் திமிங்கல வேட்டைக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து கடந்த 1988ஆம் ஆண்டு முதல் ஜப்பானில் வர்த்தகத்திற்காக திமிங்கலங்கள் வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.அதனைதொடர்ந்து ஆராய்ச்சிகாக அந்நாட்டில் வேட்டையாடப்பட்டு வந்த திமிலங்கலங்கள் பின்னர் சந்தையில் விற்பனைக்கு வந்ததால் சர்வதேச அளவில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அரிய வகை திமிங்கலங்கள் அழிந்து வருவதாக கூறி சர்வதேச திமிங்கல வேட்டைக்கான ஒழுங்குமுறை அமைப்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

இதனையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் சர்வதேச திமிங்கல வேட்டை தடுப்பு ஆணையத்தி லிருந்து விலகிய ஜப்பான், வர்த்தகத்திற்காக திமிங்கல வேட்டையை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தது.அதன்படி சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி ஜப்பானில் வர்த்தகத் திற்காக திமிங்கல வேட்டை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஜப்பானின் இந்த அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்றுதான், ஆனால் ஜப்பான் அரசின் இந்த நடவடிக்கை கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று IWC எச்சரித்துள்ளது. அதாவது, IWC-வால் பாதுகாக்கப்படும் மின்கே போன்ற அழிந்துவரும் திமிங்கல இனங்களை ஜப்பான் இனி தாராளமாக வேட்டையாடும் என கூறப்படுகிறது.