ஜஸ்ட் 650 கோடி செலவில் நடக்கும் ஒரு கல்யாணம்!- பெங்களூருவில் இன்று நடக்கிறது

ஜஸ்ட் 650 கோடி செலவில் நடக்கும் ஒரு கல்யாணம்!- பெங்களூருவில் இன்று நடக்கிறது

பெல்லாரி ரெட்டி சகோதரர்களில் ஒருவரும் பிரபல சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி கர்நாடகாவில் க‌டந்த 2008-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் சுற்றுலாத் துறை அமைச்சராக பதவி வகித்தார். 30-க்கும் மேற்பட்ட சுரங்க மோசடி வழக்கில் சிக்கி கடந்த 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். சட்டத்துக்கு விரோதமாக சுரங்கம் அமைத்து ரூ.50 ஆயிரம் கோடி வரை கனிம வளங்களை ஏற்றுமதி செய்திருப்பதாக சிபிஐ வழக்கு நடத்தி வருகிறது. இவருக்கு சுப்ரீம் கோர்ட்கடந்த ஆண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணிக்கும் ஆந்திராவைச் சேர்ந்த சுரங்க அதிபர் ராஜீவ் ரெட்டிக்கும் பெங்களூரு அரண்மனையில் இன்று திருமணம் ரூ.650 கோடி செலவில்மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

reddy nov 16

இந்த திருமணத்திற்கான அழைப்பிதழில் தொடங்கி ஆடம்பரத்திற்கு எங்கும் குறை வைக்கவில்லை ஜனார்த்தன் ரெட்டி. மற்ற திருமண அழைப்பிதழ்களில் உள்ள எழுத்துக்களுக்கு பகரமாக உள்ளே ஒரு LCD திரை இருக்கிறது. அதில் ஜனார்தன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் திருமணத்திற்கு வருபவர்களை சினிமாவில் வருவது போன்று வரவேற்கும் பாட்டு ஒன்று காண்பிக்கப்பட்டது.

திருமணத்திற்காக விஜயநகர சாம்ராஜ்யத்தை பெங்களூரு அரண்மனைத் திடலில் உருவாக்கியுள்ளார். நான்கு நாட்களாக நடக்க இருக்கும் இந்த திருமண விஷேஷம் நவம்பர் 12 ஆம் தேதி மருதாணி விழாவுடன் தொடங்கியது. இதற்காக திருப்பதியில் இருந்து 8 வேத விற்பன்னர்கள் வரவழைக் கப்பட்டுள்ளனர்.மேலும் பெங்களூருவில் உள்ள அரண்மனையில் நடைபெறும் இந்த திருமணத்துக்காக 36 ஏக்கர் பரப்பளவில் விஜயநகர பேரரசின் அரண்மனை போன்ற பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது. இதே போல திருப்பதி, ஹம்பி ஆகிய இடங்களில் உள்ள கோயில்கள், பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் வீடு, பெல்லாரி கிராமம், தாமரை குளத்துடன் கூடிய‌ கிராமிய விளையாட்டு மைதானம் போன்ற திரைப்பட பாணியிலான பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த செட்களை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பணியாற்றும் கலை இயக்குநர்கள் உருவாக்கி யுள்ளனர். இதேபோல பெரிய அளவிலான கேமராக்கள், எல்சிடி திரைகள், 3 ஆயிரம் தனியார் பாதுகாவலர்கள், என ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டுள்ளது.

மணமகளின் திருமணப் புடவையின் விலை மட்டுமே 17 கோடி ரூபாய் என்றும், அத்துடன் திருமனப்பெண்ணான பிராமினி அணியும் ஆபரணங்களின் விலை 90 கோடி மதிப்பிலானவை என்று கூறப்படுகிறது. திருமணதிற்கு வந்தவர்களை மகிழ்விக்க ஷாருக் கான் பங்கெடுக்கும் நிகழ்ச்சியும், பிரபுதேவாவின் நடனமும் இன்னும் தெலுங்கு திரையுலகின் பிரபலங்களும் கலந்துகொள்கின்றனர்.

ஏறத்தாழ 30000 விருந்தினர்கள் பங்கெடுக்கும் இந்த திருமணத்திற்கு என்று 1500 அறைகள் நட்சத்திர ஹோட்டல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை திருமண அரங்கிற்கு அழைத்து வர 2000 வாகனங்களும் இன்னும் முக்கியமான நபர்களை வரவேற்க 15 ஹெலிபாட்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கருப்புப் பணத்திற்கு எதிராக பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்துள்ள நிலையில், மக்கள் காசுக்காக அல்லல்படும் நிலையில், மேலும் காலி ஜனார்தன ரெட்டியின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ள இந்நிலையில் இப்படி ஒரு திருமணத்தை நடத்த இவரிடம் எப்படி இவ்வளவு பணம் உள்ளது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி வருமான வரித்துறையிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

அதில், “சுரங்க மோசடி வழக்கில் சிக்கிய முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த் தன ரெட்டியின் வ‌ங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன. மேலும் 4 ஆண்டுகளாக அவர் எந்த தொழிலும் செய்யவில்லை. இத்தகைய இக்கட்டான நிலையில் ஜனார்த்தன ரெட்டியால் எப்படி ரூ.650 கோடியை புரட்ட முடிந்தது?

திருமணம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான பிறகும், வருமான வரித்துறை அதிகாரிகள் மவுனம் காப்பது ஏன்? பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த திருமணத்தில் கறுப்புப் பணம் புழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த திருமணத்தை தீவிரமாக கண்காணித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!