பெண் பத்திரிகையாளரின் சம்மதத்துடனே உறவு! – எம்.ஜே. அக்பர் ஸ்டேட்மென் – AanthaiReporter.Com

பெண் பத்திரிகையாளரின் சம்மதத்துடனே உறவு! – எம்.ஜே. அக்பர் ஸ்டேட்மென்

அண்மையில் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த  எம்.ஜே.அக்பர் மீது அமெரிக்க வாழ் இந்தியரும் பெண் பத்திரிகை யாளருமான பல்லவி கோகோய் பாலியல் புகார் கூறியுள்ளார். 23 ஆண்டுகளுக்கு முன் இந்தியா வில் பணியாற்றிய போது எம்.ஜே. அக்பர் தன்னை கற்பழித்ததாக அவர் குற்றம்சாட்டிய நிலையில் அந்த பெண்ணின் சம்மதத்துடன்தான் உறவு கொண்டேன் என்று அக்பர்  விளக்கம் அளித்துள்ளார்

மிடூ என்ற இயக்கம் மூலமாக உலக அளவில் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத் தல்கள் குறித்து வெளிப்படையாக சமூக வலைதளத்தில் எழுதி வருகிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் சில பெண் பத்திரிகையாளர்கள் முன்னாள் மத்திய இணை அமைச்சரான எம்.ஜே. அக்பர் மீது பாலியல் புகார் அளித்தனர். இந்த புகார்களை மறுத்த எம்.ஜே.அக்பர் தன் மீது குற்றம் சாட்டிய பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஆனாலும் பாலியல் புகார் காரணமாக எம்.ஜே. அக்பர் தன் மத்திய அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எம்.ஜே. அக்பர் மீது புதிய பாலியல் புகார் எழுந்துள்ளது. அமெரிக்காவில் நேஷனல் பப்ளிக் ரேடியோ என்ற ஊடக நிறுவனத்தின் தலைமை வர்த்தக எடிட்டராக பணியாற்றும் அமெரிக்கா வாழ் இந்தியரான பல்லவி கோகோய் இந்த பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து உள்ளார். தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கட்டுரையாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியிட்டுள்ளார் பல்லவி கோகோய்.

அதில் எம்.ஜே. அக்பரின் கீழ் ஏசியன் ஏஜ் பத்திரிகையில் ஓப்-எட் (op-ed page) பக்கத்தின் ஆசிரியராக பணியாற்றிய போது இருமுறை எம்.ஜே. அக்பர் தன்னை வலுக்கட்டாயமாக முத்தமிட வந்தார். அதில் இருந்து தான் தப்பியதாக பல்லவி தெரிவித்துள்ளார்.

‘‘தனக்கு இணங்க வேண்டும். இல்லையென்றால் வேலையில் இருந்து தூக்கிவிடுவதாக எம்.ஜே. அக்பர் மிரட்டினார். அதன் பின் ஜெய்பூரில் வேலை விஷயமாக தங்கியிருந்த போது எம்.ஜே. அக்பர் அவரது ஹோட்டல் அறைக்கு என்னை அழைத்தார். அங்கு சென்றபோது என்னை எம்.ஜே. அக்பர் கற்பழித்தார். அவருடன் நான் போராடினேன். ஆனால் உடல் ரீதியாக அவர் மிகவும் சக்தி வாய்ந்த வராக இருந்ததால்,என்னால் தப்பிக்க முடியவில்லை’. ‘இதைபற்றி போலீஸ் நிலையத் துக்கு புகார் செய்யவில்லை. அந்தச் சமயம் அவமானம் என்னை மூழ்கடித்துவிட்டது. பின்னர் இதைப் பற்றி நான் யாரிடமும் சொல்லவில்லை. யாராவது என்னை நம்புவார்களா? நான் ஏன் அவரது அறைக்கு சென்றேன் என்று என்னை நானே குற்றம் சாட்டினேன்’’ என பல்லவி கோகோய் தன் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அதன் பின்பும் பல முறை தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும் அதனால் தான் மனரீதியாக உடல்ரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் எம்.ஜே. அக்பர் மீது பல்லவி குற்றம் சாட்டி உள்ளார். மேலும் எம்.ஜே அக்பர் போன்றவர்கள் தங்களை சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் களாக நினைத்து கொள்கிறார்கள். அவர் எனக்கு இழைத்த கொடுமைக்கு தக்க தண்டனை பெற மாட்டார் என்றே நான் நம்பினேன். இன்று என் வாழ்க்கையில் நான் யாருக்கும் அடிபணிய தேவையில்லை என்பதை உணர்ந்துவிட்டேன். நான் விரும்பிய பணியில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறேன் என பல்லவி கோகோய் கூறியுள்ளார்.

பல்லவி கோகோய் கூறியுள்ள இந்த குற்றச்சாட்டை எம்.ஜே. அக்பரின் வழக்கறிஞர் மறுத்துள்ளார். இந்த சம்பவங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று அவர் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் தெரிவித்துள்ளார். மேலும்  எம்.ஜே. அக்பர் அளித்த ஒரு விளக்கத்தில்,  “‘பத்திரிகை யாளர் பல்லவி கோகாய் கூறியுள்ள புகாரில் எதுவும் உண்மையில்லை. இதுபோன்று யாரையும் நான் பாலியல் துன்புறுத்தல் செய்யவில்லை. அவருடன் ஒப்புதலுடன் தான் உறவு வைத்துக் கொண்டேன். சில மாதங்கள் இது தொடர்ந்தது. எனினும் இதனால் என் குடும்பத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில பிரச்சினைகள் எழுந்தன. இதையடுத்து அந்த உறவை கைவிட்டு விட்டேன்’’ எனக் கூறியுள்ளார்.