31 செயற்கை கோள்கள்களுடன் இஸ்ரோவின் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!

நாம் வாழும் இந்த பூமியை மிகத் துல்லியமாகப் படமெடுக்கும் திறன் கொண்ட ஹைசிஸ் செயற்கைக் கோள், பிஎஸ்எல்வி – சி43 விண்கலம் மூலம் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவு தளத்தில் இருந்து 31 செயற்கை கோள்களை சுமந்து கொண்டு இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கியது. 28 மணி நேர கவுண்டவுன் முடிவடைந்ததும், காலை 10 மணி அளவில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ தயாரித்த எச்ஒய்எஸ்ஐஎஸ் என்ற பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா உள்ளிட்ட 8 நாடுகளை சேர்ந்த ஒரு மைக்ரோ மற்றும், 29 நானோ செயற்கைகோள்கள் என மொத்தம் 31 செயற்கைகோள்களுடன் இந்த ராக்கெட் செலுத்தப் பட்டது. குறிப்பாக அமெரிக்காவின் 23 செயற்கைகோள் களை சுமந்து செல்கிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோளின் எடை 380 கிலோ கிராம் ஆகும். இந்திய செயற்கைகோள் சூரிய சுற்று வட்டப்பாதையில் செலுத்தப்படும். இதன் இயக்க காலம் 5 வருடங்கள் ஆகும்.

ஹைசிஸ் செயற்கைகோளில் மிகத் துல்லியமாக புகைப்படம் எடுக்கும் கேமிரா பொருத்தப் பட்டுள்ளது. வெளிநாட்டு செயற்கை கோள்கள் 504 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டன.

ஹைசிஸ் செயற்கைகோள் வனப்பகுதி, வேளாண்மை, ராணுவப் பகுதிக்காக பயன்படுத்தப்படும். 630 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த செயற்கைகோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. செயற்கை கோள் ஏவுதல் வெற்றி கரமாக நடைபெற்றதையடுத்து விஞ் ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

error: Content is protected !!