ராகுல் மேஜிக்? அல்லது நோட்டா கலாட்டா?

ராகுல் மேஜிக்? அல்லது நோட்டா கலாட்டா?

பாஜகவை 16 இடங்களில் நோட்டா தோற்கடித்து விட்டது. அந்த ஓட்டுக்கள் பாஜகவிற்கு விழுந்திருக்க வேண்டியவை. விழுந்திருந்தால் பாஜக சென்ற முறை போல் 115 இடங்களில் வென்றிருக்கும். காங்கிரசின் வெற்றியில் ராகுல் மேஜிக் ஏதும் இல்லை என ஒரு வலை தளத்தைக் காட்டி வாதிடுகிறார் நண்பர் வி. கிருஷ்ணமூர்த்தி (15 இடங்களைப் பட்டியலிடுகிறது வலைத்தளம்)

நோட்டா ஓட்டுக்கள் எல்லாம் பாஜகவிற்கு விழுந்திருக்க வேண்டிய ஓட்டுக்கள்தான் என்று நான் நம்பவில்லை. (அவர் சொல்லும் காரணம், ஜி.எஸ்.டியினால் பாஜக மீது கோபம். ஆனால் காங்கிரசிற்கு போட மனமில்லை) ஆனால் இது சுவாரஸ்யமாக இருப்பதால் பகிர்கிறேன்:

1.சோட்டா நாக்பூர் : 1093 வாக்குகள் வித்தியாசத்தில் காங் வெற்றி. இங்கு பதிவான நோட்டா: 5870
2.டாங்ஸ்: காங் வெற்றி வித்தியாசம் 768; நோட்டா 2184
3.தசாதா: காங் வெற்றி வித்தியாசம் 3728 நோட்டா 3797
4.தியோதர்: காங் வெற்றி வித்தியாசம் 972 நோட்டா: 2988
5. தனேரா: காங் வெற்றி வித்தியாசம் 2093 நோட்டா 2341
6. ஜாம் ஜோத்பூர்: காங் வெற்றி வித்தியாசம் 2518 நோட்டா 3214
7. காப்ரதா : காங் வெற்றி வித்தியாசம் 170 நோட்டா: 3686
8. மான்சா: காங் வெற்றி வித்தியாசம் 524 நோட்டா 3000
9 மோடாசா காங் வெற்றி வித்தியாசம் 147 நோட்டா: 3515
10 மோர்பி காங் வெற்றி 3418 நோட்டா 3069
11.மோர்வா ஹடாஃப்: காங் வெற்றி வித்தியாசம் 4366 நோட்டா: 4962
12. சொஜித்ரா : காங் வெற்றி வித்தியாசம் 2388 நோட்டா: 3112
13 தலாஜா; காங் வெற்றி வித்தியாசம் 1789 நோட்டா; 2918
14 வான்கனீர்: காங் வெற்றி வித்தியாசம் 1361 நோட்டா 3170
15 லூனாவாடா காங் வெற்றி வித்தியாசம்: 3200 நோட்டா: 3419

நீங்கள் சொல்லுங்கள்:
ராகுல் மேஜிக் நடந்திருக்கிறதா?
இல்லை நோட்டா செய்த கலாட்டாவா?

மாலன் நாராயணன்

Related Posts

error: Content is protected !!