ஐபிஎல்: சென்னைப் போட்டியை காண வரும் ரசிகர்கள் எடுத்து வர கூடாதவைப் பட்டியல்! – AanthaiReporter.Com

ஐபிஎல்: சென்னைப் போட்டியை காண வரும் ரசிகர்கள் எடுத்து வர கூடாதவைப் பட்டியல்!

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திட்டமிட்டப்படி நடக்கிறது. இதில் முதல் ஆட்டம் நாளை நடைபெறுகிறது. அதே சமயம் ஐபிஎல் போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் ஐ.பி.எல். போட்டியை நடத்த பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனாலும் பலத்த பாதுகாப்புடன் ஐ.பி.எல். போட்டி சென்னையில் நடைபெறும், வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்படாது என்று போட்டி அமைப்பாளர்கள் அறிவித்தனர். நாளை நடைபெற இருக்கும்

இந்த நிலையில் சென்னையில் ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ்சுக்லா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “ஐ.பி.எல். போட்டிகள் சென்னையில் திட்டமிட்டபடி அதே தேதிகளில் நடைபெறும். அதில் மாற்றம் இல்லை. ஐ.பி.எல். போட்டியை அரசியலாக்க வேண்டாம்”என்று அவர் கூறினார்.

இதற்கிடையே நாளை ஐபிஎல் போட்டி நடைபெற்றால் சேப்பாக்கம் மைதானம் முற்றுகையிடப் படும், வீரர்கள் சிறை பிடிக்கப் படுவார்கள் என ஒருதரப்பினர் கூறி வருவதால் சேப்பாக்கம் மைதானமும், சென்னை அணி வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

இந்நிலையில் . அந்த வகையில் மைதானத்திற்குள் ரசிகர்கள் எடுத்து வரக்கூடாது என தடை செய்யப்பட்ட பொருட்களின் விபரம் இதோ:

கைப்பை

செல்ஃபோன்

சூட்கேஸ்

பேஜர்

ரேடியோ

டிஜிட்டல் டைரி

லேப்டாப்

கம்ப்யூட்டர்

டேப் ரெக்கார்டர்

பைனாகுலர்

ரிமோட் கண்ட்ரோல் சாதனங்கள்

ரிமோட் கண்ட்ரோல் கார் சாவி

எலக்ட்ரானிக் சாதனங்கள்

இசைக்கருவிகள்

வீடியோ கேமரா

டிஜிட்டல் கேமரா

பட்டாசு

எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள்

வெடிப்பொருட்கள்

உணவு பொருட்கள்

தெர்மோஸ் பிளாஸ்க்

தண்ணீர் பாட்டில்

சிகரெட், பீடி

தீப்பெட்டி, லைட்டர்

ரேசர், கத்தரிக்கோல்

கண்ணாடி, கண்ணாடி டம்ளர்

கத்திம்,பேட்டரி

வெளியில் இருந்து எடுத்து செல்லப்படும் திண்பண்டங்கள்/ கூல் டிரிங்ஸ்

வாகனங்களை பார்க்கிங் பகுதியில் மட்டுமே நிறுத்த வேண்டும்

ரசிகர்கள் காவல்துறையினரின் பாதுகாப்புக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர்

மைதானத்திற்குள் எந்த பொருளையும் எறியக்கூடாது

கேலரியில் பேப்பர்கள் உள்ளிட்டவற்றிற்கு தீயிட்டு கொளுத்தக் கூடாது.

தேசிய கொடிக்கு அவமரியாதை செய்யக்கூடாது

அனைத்து வயதுடைய குழந்தைகளுக்கும் டிக்கெட் அவசியம்

ஆபாச வார்த்தைகள்/ இன எதிர்ப்பு நடவடிக்கைகள், கருத்துக்களுக்கு தடை

மறு நுழைவு அனுமதிக்கப்படமாட்டாது

செல்ஃபோன், கேமரா, உணவு பொட்டலங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்து செல்லக்கூடாது.