ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 16-ம் தேதி காலை தொடங்கும்!

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 16-ம் தேதி காலை தொடங்கும்!

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழா என்றி கொண்டாப்படும் 2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 23-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றனர். இதற்கான டிக்கெட் விற்பனை வரும் மார்ச் 16 ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதன் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் முன் கூட்டியே தொடங்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்ததால், ஐபிஎல் போட்டிக் கான அட்டவணை ஏப்ரல் 5 தேதி வரை நடைபெறவுள்ள போட்டிகளுக்கு மட்டுமே வெளியிடப் பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 11ம் தேதி முதல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவாறு ஐபிஎல் போட்டிக்கான முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 16-ம் தேதி காலை 11.30 மணி தொடங்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள டிஎன்சிஏ பாக்ஸ் ஆபீஸில் ரசிகர்கள் டிக்கெட்டை வாங்கி செல்லலாம். ரூ.1300 முதல் தொடங்கும் டெக்கெட்டின் விலை, வெவ்வேறு கேலரிக்கு ஏற்ற மாதிரி மாறுபடும்.

அதேபோல கவண்டர்களில் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு நபர் 2 டிக்கெட்டுகளுக்கு மேல் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமும் புக் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!