உலக அளவில் இணைய பயன்பாட்டில் இரண்டாமிடம் பிடித்த இந்தியா! – AanthaiReporter.Com

உலக அளவில் இணைய பயன்பாட்டில் இரண்டாமிடம் பிடித்த இந்தியா!

செல்போனில் அடங்கி விட்ட இணையத்தை பயன்படுத்துவோர் இந்தியாவில் அதிக அளவில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்டுதோறும் இணையத்தின் ட்ரெண்ட் குறித்து மேரி மீகர் ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது. அதன்படி உலகளவில் 2018-ம் ஆண்டு 380 கோடி இணையப் பயனாளர்கள் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 51 சதவீதம் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே பயன்பாடு உலகளவில் 2017-ம் ஆண்டு 49 சதவீதமாக இருந்தது. பேஸ்புக், யூடியூப், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் பயன்பாடும் அதிகரித்து உள்ளது.

இந்த ஆய்வின் படி அதிக இணையப் பயனாளர்கள் கொண்டதில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனா 21 சதவீதத்தை பெற்றுள்ள நிலையில், 12 சதவீத புள்ளிகளை பெற்று இணையப் பயனாளர்களை அதிகமானோர் கொண்டுள்ள பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை 8 சதவீத இணையப் பயனாளர்களுடன் அமெரிக்கா உள்ளது.

உலகளவில் ஒரு சிறந்த இணைய நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ மதிப்பிடப்படுகிறது.சர்வதே அளவில் இணையம் பயன்படுத்துவோரின் மொத்த எண்ணிக்கை 3.8 பில்லியன். இது உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் பாதிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைய சேவையைப் பயன்படுத்துவோரின் உலகளாவிய எண்ணிக்கை விகிதம் மெதுவான முறையில் அதிகரித்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டில் அதன் வளர்ச்சி விகிதம் 6%. அதேசமயம், 2017ம் ஆண்டில் 7% என்பதாக இருந்தது.