ஜிசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது! – AanthaiReporter.Com

ஜிசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது!

இந்திய விமானப்படையின் தனித் தகவல் தொடர்புக்காக இஸ்ரோ நிறுவனம் சார்பில் இன்று மாலை 4.15 க்கு ஜிஎஸ்எல்வி-எப்-ராக்கெட்டில் ஜிசாட் 7ஏ என்ற செயற்கைகோள் வெற்றிகரமாக அனுப்பப் பட்டது.

இந்திய விமானப்படை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதன் தகவல் தொடர்பு தனித்துவமாக இருக்கின்றது. போர் பயன்பாட்டிற்காகவும், தற்காப்பு, இயற்கை சீற்றங்களுக்கு உதவுவதற்காகவும் தகவல் தொடர்பு விமானப்படைக்கு முக்கிய அவசியமாகின்றது. இதற்காக ஜிசாட்7ஏ ராக்கெட் அனுப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படைக்கான தகவல் தொடர்பை மேம்படுத்தும் விதத்தில், ஆளில்லா விமானங் கள் மூலம் கண்காணிப்பது, போர்க்காலங்களில் வான்வழி தாக்குதல்களுக்கு இந்த செயற்கைக் கோள் பெரிதும் பயன்படும். இந்திய ரேடார் கட்டுப்பாட்டு மையங்களுக்கு விமானங்களின் இருப்பிடத்தையும் இது துல்லியமாகக் காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

புவி வட்டப்பாதையில் இதுவரை ராணுவ பயன்பாட்டுக்கு உதவக்கூடிய 320 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதில் பாதிக்கும் மேற்பட்ட கோள்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதை தவிர்த்து ரஷ்யா, சீனா நாடுகளும் பல ராணுவ பயன்பாட்டுக்குரிய செயற்கைக் கோள்களை நிலை நிறுத்தியுள்ளன.

அந்த வரிசையில் நம் இந்தியா சார்பில் ஜிசாட்-7ஏ ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்ட பின்பு அங்குள்ள கட்டுப்பாட்டு அறையில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் விஞ்ஞானி கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், “ ஜிசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக குறித்த புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவுக்கு கிடைத்த வெற்றி. அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது, 35 நாளில் விண்ணில் செலுத்தப் பட் டுள்ள 3-வது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். அதிலுள்ள சோலார் பேனல்கள் விரிந்து செயல்படத் தொடங்கியுள்ளன.

செயற்கைக்கோளின் சுற்று வட்டப்பாதையை உயர்த்தும் பணி வியாழக்கிழமை (இன்று) காலை மேற்கொள்ளப்படும். இந்த செயற் கைகோளிலும், அதை விண்ணில் செலுத்திய ஜிஎஸ்எல்வி ராக்கெட் டிலும் கூடுதல் தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டன. தற்போதைய வெற்றியானது இஸ்ரோவுக்கு அதிக பொறுப்புணர்வையும் இன் னும் பல திட்டங்களை வெற்றி கரமாக செயல் படுத்த வேண்டும் என்ற உந்துதலையும் அளித்துள் ளது. நம் நாட்டின் செயற்கை கோள்கள் தேவையை இஸ்ரோ நிறைவேற்றும். அடுத்த ஆண்டு 32 விண்வெளி திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.இவ்வாறு சிவன் கூறினார்.