நம்ம சென்னை பையன் லிடியனுக்கு ஏ ஆர் ரஹ்மான் பாராட்டு விழா! – AanthaiReporter.Com

நம்ம சென்னை பையன் லிடியனுக்கு ஏ ஆர் ரஹ்மான் பாராட்டு விழா!

அமெரிக்காவில் நடைபெற்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ’தி வேர்ல்ட் பெஸ்ட்’ நிகழ்ச்சி யில் பட்டத்தையும், 10 லட்சம் அமெரிக்க டாலர்கள்(இtந்திய மதிப்பில் சுமார் 7 கோடி) பரிசுத் தொகையை வென்று உலகையே திரும்பிப் பார்க்க செய்துள்ளார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம்.

அமெரிக்காவில் ’தி வேர்ல்ட் பெஸ்ட்’ என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதனை புகழ்பெற்ற ஹாலிவுட் தொகுப்பாளரான ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து கலைஞர்கள் குழுவாகவும், தனி நபராகவும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த பியானோ கலைஞரான சிறுவன் லிடியன் நாதஸ் வரமும் (வயது 12) கலந்து கொண்டார். லிடியன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது முதலே, தனது அசாத்திய திறமையால் ரசிகர்கள் பலரின் பாராட்டுதலை தொடர்ந்து பெற்றுவந்தார்.

இதன் காரணமாக பிரபல ஹாலிவுட் டிவி நிகழ்சிகளான எலன் ஷோ உள்ளிட்டவைகளில் லிடியன் கலந்துகொண்டார். இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்த போட்டியில் இறுதிச் சுற்றில் சாம்பியன் பட்டம் வென்று லிடியன் நாதஸ்வரம் அசத்தியுள்ளார்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சியில் இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து இசை கலைஞர்களை மகிழ்வித்த பட்டத்தை வென்ற லிடியனுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே லிடியன் அவர் இசை பயின்றது சென்னையிலுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரி. அதனால் லிடியனை ஊக்குவிக்கும்பொருட்டு ரஹ்மான் அவருக்குப் பாராட்டு விழா நடத்தினார். அப்போது பேசிய ரஹ்மான்,” லிடியன் தற்போது சர்வதேச கவனத்தை சென்னை இசைக்கலாசாரம் பக்கம் திருப்பியிருக்கிறார். இவரைப் பயிற்றுவித்தற்குப் பெருமைகொள்ளும் அதேவேளையில், லிடியனின் தந்தையைப் பாராட்டி ஆக வேண்டும். தன் பிள்ளையை சர்வதேச அளவில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்.

சினிமாக்களில் என்னோடு அவர் இசையமைப்பதைவிட, வெவ்வேறு உயரங்களைத் தொட வேண்டும். அவருள் எதிர்காலத்தைப் பார்க்கிறேன். நம் நாட்டில் வசதிகள் இல்லை என்ற புகார் இருக்கு. அதேநேரத்தில், ஒரு விதையை விதைச்சு, அது செடியா, மரமா வளர்க்க முடியும்கிறமாதிரி, ஒவ்வொரு மனுஷனாலயும் யாரோ ஒருத்தரை இன்ஸ்பயர் பண்ணமுடியும். நாங்க இன்னைக்கு இதை இசைத் துறையில் பண்ணியிருக்கோம். இதேபோல சினிமா, அரசியல், தொழில்துறையில பண்ணலாம். உலகெங்கும் நடக்கும் விஷயங்கள், நம்மை ‘ஏன்டா வாழ்றோம்னு தோணவைக்குற நேரத்துல’ லிடியன் மாதிரி ஆள்கள் செய்வது வாழ்க்கையை வாழ நம்பிக்கையளிக்கிறது” என்றார்.