இந்தியாவின் முதல் குடிமகனாகும் இரண்டாவது தலித் தலைவர் – கொஞ்சம் அலசல்!

இந்தியாவின் முதல் குடிமகனாகும் இரண்டாவது தலித் தலைவர் – கொஞ்சம் அலசல்!

நம் நாட்டின் முதல் குடிமகன் என்ற அந்தச்து பெறும் ஜனாதிபதி எனப்படும் குடியரசு தலைவ ருக்குரிய அதிகாரங்கள் பற்றி இந்த தலைவருக்கான தேர்தல் நடக்கும் போது மட்டும் நம்மவர்கள் கொஞ்சம் மேலோட்டமாக பேசுவது வாடிக்கை. அப்போதெல்லாம் பலரின் கருத்து இந்த போஸ்ட் வெறும் ட்ம்மி பீஸ்தானே..வெறும் ரப்பர ஸ்டாம்ப்தானே … நாடு விட்டு நாடு டூர் மட்டும் போறவர் தானே என்றுதான் இருக்கிறது. ஐந்து ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ. இரண்டு லட்சம் ஊதியத்துடன் வசதியான வாழ்க்கை, சிம்லா, ஹைதராபாதில் அரண்மனை போன்ற பங்களாக்கள் போன்ற சகல வசதிகளுடன், முப்படைகளின் தளபதி, நாட்டின் இறையாண்மையைக் காக்கும் பாதுகாவலர், முதல் குடிமகன் எனப் பல பெருமை.படைத்த இவ்ர்தான் பிரதமர் மற்றும் அமைச்சர்களை நிய மிக்கும் அதிகாரம் பெற்றவர்.எனினும், பிரதமர் தலைமையில் இருக்கின்ற அமைச்சரவை வழங்கு கின்ற ஆலோசனையின் பேரில்தான் அவர் இயங்குகிறார். அப்ப்டிதான் இயங்க வேண்டும் என்று நம் சட்டம் வழிகாட்டியுள்ளது. பல நேரங்களில் நிலையற்ற அரசுகள் மத்தியில் அமையும்போது இந்த குடியரசுத் தலைவரின் பங்களிப்பு முக்கியமாகக் கருதப்படுகிறது. உண்மையில் பல குடியரசுத் தலைவர்கள் முதல் தர குடிமகனாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் நாட்டின் உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவிக்கு இரண்டாவது முறையாக தலித் இனத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். முதன் முதலாக தலித் இனத்தை சேர்ந்த மறைந்த கே.ஆர். நாராயணன் ஜனாதிபதியாக இருந்தார்.தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ராம்நாத் கோவிந்த் ஒரு பிரபல தலைவராக இல்லாத போதிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத இதர பல கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருப்பதால் அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்றுதான் சொல்கிறார்கள்.

இந்த தலித் இனத்தை சேர்ந்த கே.ஆர். நாராயணனும் ராம்நாத் கோவிந்தும் வெவ்வேறு வழிகளை கடைப்பிடித்தவர்கள். கே.ஆர். நாராயணன் பல நாடுகளின் தூதராக பணியாற்றி அரசியலுக்கு வந்தவர். 1992-ம் ஆண்டில் துணை ஜனாதிபதியாக கே.ஆர். நாராயணன் பதவி ஏற்றார். அதனையடுத்து 1997-ம் ஆண்டு ஜனாதிபதியாக பதவி ஏற்றார். இவருக்கு இடதுசாரி கட்சிகள் பெரும் ஆதரவு கொடுத்தன. ஜனாதிபதி பதவிக்கு நாராயணன் பெயரை முதலில் இடதுசாரி கட்சிகள்தான் சிபாரிசு செய்தன.

பெயர் பெற்ற தூதராக இருந்த நாராயணன், அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி வேண்டு கோளின்படி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலுக்கு வந்தார். நாராயணனுக்கு 64 வயதாக இருக்கும்போது முதன் முதலாக 1984-ம் ஆண்டு லோக்சபை தேர்தலில் போட்டி யிட்டார்.பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ராம்நாத் கோவிந்த், படிப்படியாக கட்சியால் உயர்த்தப்பட்டவர். அதோடு மட்டுமல்லாது பல்வேறு அமைப்புகளிலும் ராம்நாத் கோவிந்த் இருந்தவர். கேரளாவை சேர்ந்த நாராயணன், அடுத்தடுத்து நடந்த 3 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மத்தியில் ராஜீவ்காந்தி தலைமையில் காங்கிரஸ் அரசு இருந்தபோது மத்திய அமைச்சராக இருந்தார்.

அதேசமயத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த், இரண்டு முறையும் தோல்வி அடைந்தார். ஆனால் அவரை பாரதிய ஜனதா கட்சியானது 2 முறை ராஜ்யசபை உறுப்பினராக்கி அவரது நிலையை உயர்த்தியது.ராஜூவ் காந்திக்கு பின்னர் பிரதமராக பதவி ஏற்ற நரசிம்மராவ், நாராயணனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. இதற்குக்காரணம் நாராயணன் இடதுசாரி கொள்கையை உடையவராக இருந்ததால்தான். அதேசமயத்தில் நாராயண னுக்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு இருந்தது. கடந்த 1992-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பாக சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்பட்டார்.

அப்போது துணை ஜனாதிபதி பதவிக்கு நாராயணனை நிறுத்தினால்தான் சர்மாவுக்கு ஆதரவு கொடுப்போம் என்று இடதுசாரி கட்சிகள் நிபந்தனை விதித்தன. வேறுவழியில்லாமல் நாராயணன் துணைஜனாதிபதியாக்கப்பட்டார். பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு இயற்கையாகவே ஜனாதிபதியாக நாராயணன் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸில் படித்த நாராயணன், ஐ.எப்.எஸ். தேர்வானவர். அதே சமயத்தில் ராம்நாத் கோவிந்த், விடாமுயற்சியுடைய மாணவர். யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றாலும் அரசு பணிக்கு செல்ல அவருக்கு விருப்பம் இல்லை. அதனால் சட்ட்ப்படிப்பு படித்து சுப்ரீம்கோர்ட்டு வழக்கறிஞராக பணியாற்றினார். சுப்ரீம்கோர்ட்டில் உள்ள மத்திய அரசின் வழக்கறிஞர் குழுவில் 1980-ம் ஆண்டிலிருந்து 1993-ம் ஆண்டுவரை பணியாற்றினார்.

சாதி ஆதிக்கம் உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தவர் ராம்நாத் கோவிந்த். எந்த மாநிலத்தில் இல்லாத அளவுக்கு இந்த மாநிலத்தில் தலித்கள் மீது அதிக அளவு தாக்குதல் நடக்கும் என்று கூறப்படுகிறது. தலித் மக்களின் நலன்களுக்காகவும் உரிமைக்காகவும் தொடர்ந்து பாடுபட்டவர் ராம்நாத். இவர் ராஜ்யசபை உறுப்பினராக இருந்தபோது மத்திய அரசு கொண்டுவன்த சட்டத்தில் தலித் இனத்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. அதனால் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து வெற்றிபெற்றவர் ராம்நாத்.

1997-2002-ம் ஆண்டில் ராம்நாத், ராஜ்யசபை உறுப்பினராக இருந்தபோது நாட்டில் அரசியல் நிலைமை ஸ்திரமற்றதாக இருந்தது. பாரதிய ஜனதா எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. காங்கிரசும், ஜனதா கட்சிகளும் சரிவை சந்தித்துக்கொண்டியிருந்தன. அதனால் அப்போது ஜனாதிபதியாக இருந்த நாராயணன், லோக்சபையை இரண்டுமுறை கலைத்தார். தற்போது மத்தியில் பாரதிய ஜனதா தலைமையில் ஒரு பலமான அரசு இருக்கிறது. இந்த நேரத்தில் ராம்நாத் ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளது உறுதியாகிவிட்டது.

நாராயணன் ஜனாதிபதியாக இருக்கும்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கலைக்கக்கோரி மத்திய அரசு இரண்டு முறை திருப்பி அனுப்பியது. அதற்கு நாராயணன் மறுத்ததோடு, நான் ரப்பர் ஸ்டாம்பு இல்லை என்று மத்திய அரசுக்கு செய்தி அனுப்பினார் என்பது வரலாறு.

Related Posts

error: Content is protected !!