வெனின்ஸுலாவின் கரன்சி செல்லாது என்ற அறிவிப்பை இந்தியாவுடன் ஒப்பிடாதீங்கோ! – AanthaiReporter.Com

வெனின்ஸுலாவின் கரன்சி செல்லாது என்ற அறிவிப்பை இந்தியாவுடன் ஒப்பிடாதீங்கோ!

நேற்று சில லோக்கல் மீடியாக்களில் ஒரு செய்தி ஒலி/ஒளிப் பரப்பானது. அதாவது இந்தியா போல வெனின்ஸுலாவும் தன் நாட்டு கரென்சியை டீ மானிட்டைசேஷன் செய்துள்ளது. அதனால் மக்கள் வங்கிகளில் குவிந்தனர் என்று ஒப்பீடு செய்தது. அது பெரும் காமெடிக்குரியதாக்கும். வழக்கம் போல கச்சா எண்ணெய் மட்டும் இருந்தால் போதும், தன் நாட்டை செல்வம் கொழிக்கும் நாடாக வைத்திருக்க முடியும் என்று நம்பும் வரிசையில் வெனின்ஸுலா நாடும் ஒன்று.

ravi dec 15

இத்தனைக்கும் இந்த நாடு தான் உலகில் அதிகம் கச்சா எண்ணெய் வைத்திருக்கும் ஒரு நாடு. 2014 வரை நல்ல ரிச்சான நாடாக இருந்த இந்த நாடு 2014ல் கச்சா எண்ணெய் 100 டாலர் ஒரு பேரல் என்று இருந்த மார்க்கெட் 50 டாலருக்கு சரிந்த நாளில் இருந்து நாட்டின் நிலமை மோசமாகியது. பல வெனின்ஸுலா நாட்டினர் அமெரிக்காவுக்கு இப்போது அதிகம் வருவது எதற்கு தெரியுமா – டாயலட் பேப்பர் என்னும் குண்டி துடைக்கும் காகிகத்தை வாங்கி செல்லத்தான். ஏன் என்றால் அத்தனை விலை அந்த நாட்டில் விற்பதால்.

ஒரு கட்டத்தில் ஒரு டாலருக்கு 100 பொலிவர் ஆக இருந்த ஒன்று இப்போது 1273 பொலிவர் கிடைக்கும் அளவுக்கு உயர்ந்தது. இந்த நாட்டின் கச்சா எண்ணெய் 26 டாலருக்கு கீழே சென்றதால் ஒரு பேரல் எடுக்கும் மினிமம் செலவான 45 க்கு கீழே சென்றதால் நாடே அதள பாதாளத்துக்கு சென்று விட்டது. இன்ஃபிலேஸன் என்னும் பணம் வீக்கம் தற்போது 475% சதவிகிதம் உயர்ந்துள்ளது.

அத்துடன் அடிப்படை தேவைகளை உற்பத்தி செய்ய தவறியதில் அனைத்தும் இற்க்குமதி என்ற வாழ்வின் தவறன பழக்கம் டாலர் 1300 மடங்கு உயரந்ததால் இறக்குமதி செய்ய முடியாமல் மாதத்தில் இரண்டு நாள் மட்டும் பார்டரை கிராஸ் செய்து பக்கத்து நாடான கொலம்பியாவில் போய் அர்இசி பருப்பு வாங்க மக்கள் 2 நாட்களுக்கு மேல் லைனின் நின்ற கொடுமை மற்றும் டாய்லட் பேப்பர் வாங்க ஃப்ளைட்டில் செல்லும் நிலமை மற்றும் உலக கடனை அடைக்க தன் நாட்டின் தங்கத்தை விற்கும் நிலைமைக்கும் ஆளானது.

அது மட்டுமா? சைனா மற்றும் அனேக நாடுகள் கடன்களை நிறுத்த அந்த நாட்டின் சரிந்த நிலைமையை கொஞ்சம் நிமிர்த்தவே இந்த 100 பிலிவர் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு. ஆனால் அதை இந்திய நாட்டின் அறிவிப்புடன் கம்பேர் செய்வது அமெரிக்காவின் எக்கானமியை அமிஞ்சிக்கரை எக்கானமியுடன் கம்பேர் செய்வதற்க்கு சமம்.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் மட்டுமே இந்த நாடு பண சாபகேடில் இருந்து உயிர் பெறும் அது 2019 வரை சாத்தியமில்லை என்றேன் தோன்றுகிறது வெனின்ஸுலா இன்னுமொரு சோமாலியா ஆவதை தவிர்க்க முடியாது என பல பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர், இந்தியாவின் பலம் / பலவீனம் நம் நாட்டின் மக்கள் தொகைதான் அதே சமயம் உலகத்தின் மூன்றாம் முக்கிய எக்கானமியாக நாம் இருக்கும் காரணம் நம் சேமிப்பு ஆணிவேர். ஆக இந்த நாட்டை வெனின்ஸுலா நாட்டை கம்பேர் செய்வது 0.00000000000001% கூட முறையில்லை!