என் மீது மீ டு கம்ப்ளையண்ட்!- சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ஷாக்

என் மீது மீ டு கம்ப்ளையண்ட்!- சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ஷாக்

கடந்த 2018 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்த தாக அதே கோர்ட்டில் பணியாற்றிய பெண் ஒருவர் புகார் தெரிவித்து முக்கிய நீதிபதிகளுக்கு அந்த பெண் கடிதம் எழுதியுள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் சஞ்சீவ் கன் அமர்வு முன்பு இன்று காலை 10.30 மணிக்கு விசாரணை வந்தது. அப்பொழுது சம்பந்தப்பட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “என் மீது பாலியல் புகார் அளித்த பெண் வெறும் ஒன்றரை மாதம் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் பணியாற்றினார். அப்படியாபட்டவர் என் மீது நீண்ட புகார் ஒன்றை கூறிவிட்டு, உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று வெறும் 10 மணி நேரம் கொடுத்தார்கள். இதுபோன்ற புகார்களுக்கு பதில் சொல்வது அவசியமில்லை என கருதினேன். கடந்த 20 வருடங்களாக தூய்மையாக பணியாற்றி உள்ளேன். அதற்கான அங்கீகாரம் தான் இந்த புகாரை என கருதுகிறேன். எனது பதவிக்காலம் முடியும் வரை பயமில்லாமல் பணியாற்றுவேன். நாட்டு மக்களுக்கு நான் சொல்வதெல்லாம் தற்போது நீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளை கையாள இருக்கிறேன். அதனை தடுக்கும் முயற்சியாக இதனை பார்க்கிறேன்”என்று தெரிவித்தது ஹாட் டாபிக்காகி விட்டது.

தற்போதை சுப்ரீம் கோர்ட் சீஃப் ஜட்ஜ் ரஞ்சன் கோகாய் மீது, சுப்ரீம் கோர்ட்டின் ஜூனியர் அசிஸ் டெண்டாக பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். அதில் அவர், ‘கடந்தாண்டு அக்டோபர் மாதம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன்னை இருமுறை மானபங்கம் செய்த சம்பவங்கள் அவரது வீட்டில் உள்ள அலுவலகத்தில் நடந்தன. இதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால், நான் டிஸ்மிஸ் செய்யப்பட்டேன். சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றிய எனது மாற்றுத்திறனாளி மைத்துனரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். தலைமை காவலராக பணியாற்றும் எனது கணவர், மைத்துனர் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்ட்டனர். நான் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வீட்டில் அவரது மனைவியின் காலில் விழுந்து மன்றாடினேன். என் மீது மோசடி குற்றச்சாட்டு கூறப்பட்டது. நான், எனது கணவர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டோம்’ என தெரிவித்துள்ளார்.

இந்த புகார் மனுவின் நகலை சுப்ரீம் கோர்ட்டில் தற்போது பணியாற்றும் 22 நீதிபதிகளின் வீட்டுக்கும் அந்தப் பெண் அனுப்பியுள்ளார். இது பற்றிய செய்தி சில செய்தி வெப்சைட்களில் வெளியானது. இந்த புகார் குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு நேற்று உடனடியாக விசாரித்தது. இந்த அமர்வை தலைமை நீதிபதி கோகாய் தானாக முன்வந்து அமைத்தார். இந்த விசாரணையின் போதுதான், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் , “ என் மீதான இந்த குற்றச் சாட்டை நம்ப முடியவில்லை. இதை மறுக்கும் அளவுக்கு நான் தரம் தாழ்ந்து போக வேண்டுமா எனவும் நான் நினைக்கவில்லை. பிரதமர் அலுவலகமும், தலைமை நீதிபதி அலுவல கமும் சக்தி வாய்ந்தவை. தலைமை நீதிபதி அலுவலகத்தை சீர்குலைக்கும் இந்த சதியின் பின்னணி யில் மிகப்பெரிய சக்தியின் சதி இருக்கிறது. நீதிபதியாக நான் பணியாற்றிய எனது 20 ஆண்டுகால சுயநலமற்ற சேவைக்கு பிறகு, எனது வங்கி கணக்கில் 6.80 லட்சம் மட்டுமே சேமிப்பு உள்ளது. மற்றொரு வங்கி கணக்கில் 21.80 லட்சம் உள்ளது. இதில் 15 லட்சம், கவுகாத்தியில் உள்ள எனது வீட்டை பழுது பார்க்க என் மகள் கொடுத்தது. பி.எப் சேமிப்பில் 40 லட்சம் உள்ளது. இதுதான் எனது சொத்து. என்னை யாராலும் பணத்தால் வளைக்க முடியாது. அதனால், இது போன்ற குற்றச் சாட்டை கூறியுள்ளனர். 20 ஆண்டு சேவைக்கு பிறகு எனக்கு கிடைத்த வெகுமதி இதுதான். இதுபோன்ற சூழ்நிலையில் நீதிபதிகள் பணியாற்ற வேண்டும் என்றால், நல்லவர்கள், இந்தப் பணிக்கு வரமாட்டார்கள். எனது பியூன் என்னை விட அதிகம் சம்பாதிக்கிறார்.

என் மீது புகார் கூறிய பெண் மீது இரண்டு எப்ஐஆர் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. 3வது வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். குற்றப் பின்னணி காரணமாக அவர் 4 நாட்கள் சிறையில் இருந்தார். நாட்டின் நீதித்துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதை நாம் அனுமதிக்கக் கூடாது. நான் எந்தவித அச்சமும் இல்லாமல் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து எனது கடமைகளை செய்வேன். விஷயம் எல்லை மீறி சென்று விட்டதால், நானே இந்த அமர்வில் இந்த வழக்கை விசாரிக்கும் முடிவை எடுத்தேன். நீதித்துறையை பலிகடா ஆக்க முடியாது. இந்த பெண் அளித்த புகாரின் உண்மைதன்மையை ஆராயாமல், அதை ஊடகங்கள் வெளியிடக் கூடாது. அடுத்த வாரம் பல முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. மேலும், இது மக்களவை தேர்தல் நடக்கும் மாதம். இந்த நேரத்தில் இது போன்ற பிரச்னை எழுப்பப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையில் உத்தரவு பிறப்பிக்கும் முடிவை எனது அமர்வில் உள்ள நீதிபதி மிஸ்ராவிடம் விட்டு விடுகிறேன். இவ்வாறு கோகாய் கூறினார்.

அதன்பின் உத்தரவு பிறப்பித்த நீதிபதி மிஸ்ரா, ‘‘இப்போதைக்கு இந்த புகாரில் நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. நீதித்துறையின் சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும், சரி செய்ய முடியாத அளவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் மிக மோசமான குற்றச்சாட்டு கூறப்பட்டுஉ ள்ளதால், விரும்பத்தகாத இந்த விஷயம் பற்றி செய்தி வெளியிடுவதா, வேண்டாமா என்பதை ஊடகங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம். ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்’’ என கூறினார். முன்னதாக, இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, பாதியில் தலைமை நீதிபதி கோகாய் வெளியேறி விட்டார்.

இதனிடையே இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா அளித்துள்ள பேட்டியில், ‘‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்படுவதை நாங்கள் கண்டிக்கிறோம். இது போன்ற குற்றச்சாட்டுகளை ஊக்குவிக்க கூடாது. இது உச்ச நீதிமன்றத்தை களங்கப்படுத்தும் முயற்சி. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வக்கீல் சங்கங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

error: Content is protected !!