இந்தியன் ஆயில் நிறுவன நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டு லாபம் 50 சதவீதம் அதிகரிப்பு!

இந்தியன் ஆயில் நிறுவன நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டு லாபம் 50 சதவீதம் அதிகரிப்பு!

2017ம் ஆண்டு ஜூன் 16 முதல் 2018ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி வரை ஓராண்டில் 207 முறை பெட் ரோல் விலை உயர்த்தப் பட்டதாகவும் அந்த காலகட்டத்தில் 107 முறை பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதாகவும் இதுபோல, டீசல் விலையில் 212 முறை உயர்த்தப்பட்டதாகவும் 93 முறை குறைக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.மேலும், அரசியலமைப்பு சட்டத்தின் 279 ஏ 5வது பிரிவின்படி, ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ள இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டு லாபம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

நம் மத்திய பெட்ரோலியத் துறையின் ஓர் அங்கமான பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப் பாய்வு அமைப்பு, இந்தியாவின் எரிபொருள் தேவை குறித்த ஜூலை மாத விவரங்களை வெளியிட் டுள்ளது. அதில், ஜூலை மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு அல்லது தேவை 7.3 சத விகித உயர்வுடன் 17.05 மில்லியன் டன்னாக இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அது 15.88 மில்லியன் டன்னாக மட்டுமே இருந்தது. ஜூலை மாதத்துக்கு முன்பாகவே ஜூன் மாதத்திலும் (2018) எரிபொருள் தேவை 8.6 சதவிகித உயர்வுடன் 17.99 மில்லி யன் டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் பயன்பாட்டில் முக்கியப் பங்கைக்கொண்டுள்ள பெட்ரோல் விற்பனை ஜூலை மாதத்தில் 7.8 சதவிகித உயர்வுடன் 23 லட்சம் டன்னாக இருந்தது. அதேபோல, 4.8 சதவிகித உயர்வுடன் 66 லட்சம் டன் அளவிலான பெட்ரோலும் ஜூலை மாதத்தில் விற்பனை செய்யப் பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஜூன் மாதத்திலும் பெட்ரோல் விற்பனை 15 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருந்தது. மே மாத இறுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.8 உயர்ந்து ரூ.78.43 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.38 உயர்ந்து ரூ.69.31 ஆகவும் இருந்தது. எனினும் ஜூலை மாத இறுதியில் பெட்ரோல் விலை ரூ.76.31 ஆகவும், டீசல் விலை ரூ.67.82 ஆகவும் குறைந்தது. இந்த விலைச் சரிவு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018-19 ஆம் ஆண்டிற் கான முதல் காலாண்டில் நிகர லாபம் ரூ.6,831 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே கால கட்டத்தில் நிகர லாபம் ரூ.4,549 கோடியாக இருந்தது. நடப்பு  நிதி யாண்டின் முதல் காலாண்டில் ரூ.7,866 கோடி மதிப்பிலான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கையிருப்பு கச்சா எண்ணெய்யின் விலை உயர்வே லாபம் அதிகரித்ததற்கு முக்கிய காரணம்.

இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அனுப்பி எரிபொருளாக மாற்றுவதற்குள் சர்வதேச சந்தையில் அதன் விலை அதிகரித்துள்ளது. இதனால் லாபம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மொத்த லாபம் நடப்பாண்டு முதல் காலாண்டில் ரூ.1,49,747 கோடியாக உள்ளது. இது கடந்தாண்டு ரூ. 1,28,183 கோடியாக இருந்தது.

கடந்த ஆண்டு முதல் காலாண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெயை எரிபொருளாக மாற்றுவதற்கு சுத்திகரிக்க, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் ஒரு பேரலுக்கு 4.32 அமெரிக்க டாலர் ஈட்டின. நடப்பாண்டு முதல் காலாண்டில் ஒரு பேரலுக்கு 10.21 அமெரிக்க டாலர் பெறப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் சேர்மன் சஞ்சீவ் சிங் கூறுகையில், முதல் காலாண்டில் 21.6 மில்லியன் டன் பெட்ரோலிய உற்பத்தி பொருட்கள் உள்நாட்டு சந்தையில் விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டு முதல் காலாண்டை விட 4.3 சதவீதம் அதிகரித்து 20.7 மில்லியன் டன் கூடுதலாக விற்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

error: Content is protected !!