அமெரிக்காவில் க்ரீன் கார்ட் வாங்க வெளிநாட்டவர் எவ்வளவு காலம் காத்திருக்கோணும்?

அமெரிக்காவில் க்ரீன் கார்ட் வாங்க வெளிநாட்டவர் எவ்வளவு காலம் காத்திருக்கோணும்?

அமெரிக்காவில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் பணிக்காக செல்கின்றனர். அவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. சட்டப்பூர்வமாக நிரந்தரமாக அங்கு தங்க வேண்டும் என்றால் க்ரீன் கார்டு பெற வேண்டும். அந்த வகையில் அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடி பெயர விரும்பும் பெற எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியுள்ளது என்பது தொடர்பான ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

க்ரீன் கார்டு வைத்திருப்பதன் மூலம் ஒருவர் அமெரிக்காவில் நிரந்தரமாக தொழில் செய்யவோ, பணி புரியவோ முடியும். திறமை மிக்க இந்தியர்கள் எச்.-1 பி விசா அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படுகிறனர். இவர்கள், சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்ட விதிகளின்படி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விதிகளின்படி எச்-1பி விசா வைத்திருப்பவர்களில் 7 சதவீதம் பேருக்கு மட்டுமே க்ரீன் கார்டு அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் அமெரிக்காவில் க்ரீன் கார்டு பெற விண்ணப்பித்துள்ள வெளிநாட்டவர்கள் குறித்தும், அதற்கு தேவைப்படும் காலம் குறித்தும் அமெரிக்க காங்கிரஸ் ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்கள் மற்றும் சீனர்கள் க்ரீன் கார்டு பெற நீண்ட காலம் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ரீன் கார்டு பெற வெளிநாட்டவர்கள் எவ்வளவு காலம் காத்திருக்கின்றனர்?

சீனர்கள் – 11 வருடம், 1 மாதங்கள்
இந்தியர்கள் – 9 வருடம், 10 மாதங்கள்
வியாட்நாம் – 2 வருடம், 8 மாதங்கள்
மெக்சிகோ – 2 வருடம்
பிற நாடுகள் – 1 வருடம், 6 மாதங்கள்

அதிக க்ரீன் கார்டு பெற்றதில் இந்தியர்கள் முன்னிலை

அமெரிக்காவில் க்ரீன் கார்டுக்கு விண்ணப்பித்ததில் இந்தியர்கள் அதிகபட்சமாக 28.6 சதவீத அனுமதியைப் பெற்றுள்ளனர். இந்தியாவைத் தொடர்ந்து சீனா, மெக்ஸிகோ, வியாட்நாம், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் முறையே 7.1 சதவீத அனுமதியைப் பெற்றுள்ளனர்.

2018 ஏப்ரல் வரையில் 3,06,601 இந்தியர்கள் க்ரீன் கார்டுக்காக விண்ணப்பித்துள்ளனர். அதில் 78 சதவீதத்தினர் வேலை சார்ந்த க்ரீன் கார்டு விண்ணப்பதாரர்களாக உள்ளனர் என்று ஆய்வறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!