போஸ்ட் ஆபிஸ் பேமென்ட்ஸ் பேங்க்-கில் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com

போஸ்ட் ஆபிஸ் பேமென்ட்ஸ் பேங்க்-கில் ஜாப் ரெடி!

இந்தியாவின் தபால் தொடர்புத் துறையின் மைய அச்சாக விளங்கும் இந்திய தபால் துறை இந்தியா போஸ்ட் என்று அனைவராலும் அறியப்படுகிறது. சமீப காலங்களில் அஞ்சல் சேவையுடன் சேர்த்து இன்ன பிற சேவைகளையும் சேர்த்து ஒரே இடத்தில் வழங்கும் புதிய அவதாரத்தையும் இத்துறை எடுத்துள்ளது. அவற்றில் ஒன்றுதான் போஸ்ட் ஆபிஸ் பேமென்ட்ஸ் பேங்க். இதில் காலியாக உள்ள இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: போஸ்ட் ஆபிஸ் பேமென்ட்ஸ் பேங்கில் மொத்தம் 47 காலியிடங்கள் உள்ளன. இவை டாக்சேஷன், பினான்சியல் பிளானிங் அண்டு பட்ஜெட்டிங், அட்மினிஸ்ட்ரேஷன், எச்.ஆர்., ரிஸ்க் பேஸ்டு ஆடிட், கன்கரன்ட் ஆடிட், வென்டார் பெர்பார்மன்ஸ் மேனேஜ்மென்ட், ரிகன்சிலியேஷன், யூசர் எக்ஸ்பீரியன்ஸ், புராடக்ட் ரிசர்ச், அனலிடிக்ஸ், ரீடெய்ல் புராடக்ட்ஸ், கம்ப்ளயன்ஸ் சப்போர்ட், ஆப்பரேஷனல் ரிஸ்க், டிஜிட்டல் டெக்னாலஜி, ஆகிய பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளன.

வயது: விண்ணப்பிப்பவர்கள் 23 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சிறப்புப் பணி தேர்வுகளை உள்ளடக்கிய பதவிகள் என்பதால் விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை: நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் ரூ. 750.

கடைசி நாள்: 2018 ஆக., 15.

விபரங்களுக்குஆந்தை வேலைவாய்ப்பு