தேர்தலோ தேர்தல்.. கொஞ்சம் 1951 டூ 2019 :சின்ன ஃபிளாஷ் பேக் ரிப்போர்ட்!

தேர்தலோ தேர்தல்.. கொஞ்சம் 1951 டூ 2019 :சின்ன  ஃபிளாஷ் பேக் ரிப்போர்ட்!

நேத்திக்கு அறிவிக்கப்பட்டு இன்னும் 38 நாட்களில் நடைபெறவிருக்கும் 17வது மக்களவைத் தேர்தலையும் இதே இந்தியாவிலே நடந்த முதல் மக்களவைத் தேர்தலையும் ஒப்பிட்டு பார்ப்போமா?.

அதாவது 1951-52ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலில் 17.32 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தாங்க. இது அப்போதைய மக்கள்தொகையிலிருந்து 48 சதவிகிதமாக இருந்தது.

ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகையிலிருந்து 69.23 சதவிகிதமாகும்.

முதலாவது (1951-52) நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெறும் வயது வரம்பு 21 ஆக இருந்தது. இந்த வயது வரம்பு கடந்த 1988ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் 18 வயதாக குறைக்கப்பட்டது.

1951-52 நாடாளுமன்றத் தேர்தல் 68 கட்டங்களாக நான்கு மாதங்கள் நடைபெற்றன. ஆனால் 2019 தேர்தல் 7 கட்டங்களாக 39 நாட்கள் நடைபெறவுள்ளன.

1951-52 நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 489 தொகுதிகள் இருந்தன. ஆனால் 2019 தேர்தலில் 543 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன.

1951-52 நாடாளுமன்றத் தேர்தலில் 53 அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. அத்துடன் அந்தத் தேர்தலில் மொத்தம் 1,849 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

2019ல் தேர்தல் ஆணையத்திடம் 2354 அரசியல் கட்சிகள் பதிவாகியுள்ளன. அத்துடன் கடந்த 2014 தேர்தலில் மொத்தமாக 8,251 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதனால் 2019ல் இந்த எண்ணிக்கை அதிகமாகும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது.

1951-52 நாடாளுமன்றத் தேர்தலில் 2.23 லட்சம் வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 10.35 லட்சம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

1951-52 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு 45.7% இருந்தது. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு 66.4% அதிகரித்துள்ளது. இதுவே இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிக வாக்குப்பதிவு சதவிகிதத்தை கொண்டதாக இருந்தது. வரும் 2019 தேர்தலில் இச்சதவிகிதம் இன்னும் அதிகரிக்கும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது.

1951-52 தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு 10 கோடி ரூபாய் செலவானது. ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 3870 கோடி ரூபாய் தேர்தல் ஆணையத்திற்கு செலவானதாக கூறப்பட்டுள்ளது. இதனால் வரும் தேர்தலில் இந்தச் செலவின தொகை மேலும் அதிகரிக்கும் என்று ஏதிர்பார்க்கப்படுது.

Related Posts

error: Content is protected !!