இந்தியா வரும் வெளிநாட்டினர் இங்குள்ள சட்ட திட்டங்களை மீறினால் தண்டனை! – AanthaiReporter.Com

இந்தியா வரும் வெளிநாட்டினர் இங்குள்ள சட்ட திட்டங்களை மீறினால் தண்டனை!

இந்தியாவின் சில இடங்களுக்கு இந்தியர்களுக்கே அனுமதி இல்லை என்பது தெரியுமா? ஆம், இந்த இடங்களுக்கு நீங்கள் சென்றால் உங்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லி நுழைய கூட விட மாட்டார்கள். அதே சமயம் வெளிநாட்டினரை அனுமதிக்கும் போக்கு நிலவும் போக்கு இருக்கும் சூழ் நிலையில் இந்தியா வரும் வெளிநாட்டினர் இங்குள்ள சட்ட திட்டங்களை மீறினால் தண்டனைக்கு ஆளாக நேரிடும்’ என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது நம் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள மாவட்டங்கள் மற்றும் பாதுகாப்பு முக்கியத்து வம் வாய்ந்த பகுதிகளுக்கு செல்ல ‘நம் நாட்டிற்கு வரும் வெளிநாட்டினர் சிறப்பு அனுமதி பெற வேண்டும்’ என சட்டம் உள்ளது. ஆனால் ‘ராய்டர்ஸ்’ எனப்படும் சர்வதேச செய்தி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் கேத்தல் மெக்நவுட்டன் என்ற ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவர் தலைமை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தார்.

இவர் சமீபத்தில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் அனுமதியின்றி நுழைந்து புகைப்படங்கள் எடுத்தார். இதையடுத்து வெளியுறவு துறை அமைச்சகம் அவரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பியது.

இந்நிலையில்தான் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர் இங்குள்ள சட்ட திட்டங்களை பின்பற்ற வேண்டும் என்றும் மீறுபவர்கள் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.