பிரியாணி வாசம் தூக்கலா இருந்ததாலே கோர்ட்டில் வழக்கு!

பிரியாணி வாசம் தூக்கலா இருந்ததாலே கோர்ட்டில் வழக்கு!
பல்வேறு நாடுகளில் பல்வேறு விசித்தர வழக்குகள் நடைபெறுவது வழக்கம்தா, அந்த வகையில் லேட்டஸ்ட் சம்பவமிது இங்கிலாந்தில் உள்ள மிடில்ஸ்பிராக் பகுதியைச் சேர்ந்தவர்கள் சபானா, முகமது குஷி தம்பதியர்கள். இந்தியர்களான இவர்கள் லிந்தார்பி  பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வருகின்றனர். இதில் பஞ்சாபி உணவு வகைகள் மற்றும் பிரியாணி, பஜ்ஜி உள்ளிட்டவையும் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றது.
biriyani may 1
இந்நிலையில், உணவகத்தில் இருந்து பிரியாணி வாசனை மிகவும் அதிகமாக வருவதாக புகார் எழுந்தது. இதனால் தங்களது துணிகளை துவைத்தால் தான், இந்த வாசனை செல்வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து குடியிருப்புவாசிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி கிரிஸ்டினா ஹாரிசன், உணவக உரிமையாளர்களான சோபானா, முகமது குஷி ஆகியோருக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் இருவரும் வழக்கு செலவாக தலா ரூ.40 ஆயிரத்தை அபாராதமாக செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. திக்கப்பட்டோருக்கான கூடுதல் கட்டணமாக ரூ.2500 செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதே நேரத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த உள்ளூர் வர்த்தகர்கள் சிலர் உணவகத்தில் இருந்து வரும் வாசனையால் எந்த பிரச்னையும் இல்லை என்று நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

error: Content is protected !!