பணம்.. ரூபாய்.. கரன்சி..அமெளண்ட் !- கடந்து வந்த பாதை! – AanthaiReporter.Com

பணம்.. ரூபாய்.. கரன்சி..அமெளண்ட் !- கடந்து வந்த பாதை!

இந்தியாவில் 1957_ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு `அணா’ என்ற நாணயம் புழக்கத்தில் இருந்து வந்தது. அதாவது பதினாறு அணா கொண்டது ஒரு ரூபாய் ஆகும். `காலணா’, `அரையணா’, `அணா’, `2 அணா’ `4 அணா’, `8 அணா’ என்று சில்லரை நாணயங்கள் இருந்தன. இந்த அணா நாணயத்தை மாற்றி புதிய பைசா நாணய முறையை கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்து 1.4.1957 முதல் புதிய பைசா நாணயம் அமுலுக்கு வரும் என்று அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. “இந்த நாணயம் எப்படி இருக்குமோ? பழைய நாணயத்தை எப்படி மாற்றுவது? இதன் விளைவாக விலைவாசி உயருமா?” என்பது போன்ற அச்சம் நிலவியது.

edir rs nov 9

ஆனால் நாளடைவில் அது சரியாகி விட்டது. 16 அணா என்ற கணக்கை மாற்றி, ஒரு ரூபாய்க்கு 100 காசு என்ற புதிய கணக்கு கொண்டு வரப்பட்டது. ஒரு அணா என்பது 6 காசு ஆனது. கணக்கு போடுவதை சுலபமாக்குவதற்காகவே இந்த மாற்றம் (தசாம்ச நாணய முறை) கொண்டு வரப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.

முதல் கட்டமாக ஒரு பைசா, 2 பைசா, 5 பைசா, 10 பைசா என்ற 4 புதிய காசுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை வருமாறு:-

1. பழைய காலணாவை கொஞ்சம் சிறிய உருவத்தில் அச்சிடப்பட்டு இருந்தது ஒரு பைசா நாணயம்.

2. ஒரு அணாவைப் போல வளைவு வளைவாக சிறிய உருவத்தில் வெளி வந்தது 2 பைசா நாணயம்.

3. அரை அணா, 2 அணா நாணயங்களைப்போல சதுர வடிவில் 5 பைசா இருந்தது. 4. அணாவைப் போலவே பெரிய உருவத்தில் 10 பைசா இருந்தது. (இதற்கு பின்னர் 20 பைசா, 25 பைசா, 50 பைசா நாணயங்கள் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.)

இந்த புதிய பைசா நாணய முறை, ஏப்ரல் 1ந்தேதி முதல் அமுலுக்கு வந்ததால், பாங்கி கணக்குகளை மாற்றவேண்டியது இருந்தது. இதற்காக பாங்கிகளுக்கு 3 நாள் விடுமுறை விடப்பட்டது. அரசு அலுவலகங்களுக்கும் 2 நாள் விடுமுறை கொடுக்கப்பட்டது. பாங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், ஏப்ரல் 4ந்தேதியில் இருந்துதான் பைசா நாணயம் பொது மக்கள் கையில் கிடைத்தது.

ஒரு ரூபாய் – பதினாறு அணா
ஒரு அணா – ஆறு பைசா
ஒரு பணம் – ரெண்டு அணா
ஒரு அணா – மூனு துட்டு
ஒரு துட்டு – ரெண்டு பைசா
பனிரெண்டு தம்பிடி – ஒரு அணா
ஒரு சல்லி – கால்துட்டு
காலணா – முக்கால் துட்டு
அரையணா – ஒன்றரைத் துட்டு
ஒரு அணா – நான்கு காலணா (அ) மாகாணி ரூபாய்
இரண்டு அணா – அரைக்கால் ரூபாய்
நாலணா – கால் ரூபாய்
எட்டு அணா – அரை ரூபாய்
கழஞ்சு – ஒரு பொற்காசு (வராகன்)
வராகன் எடை – 3.63 கிராம்
சக்கரம் – ஒரு வெள்ளிக் காசு
பதினாறு சக்கரம் – ஒரு வராகன்
சக்கரம் – பதினாறு காசு (செப்பு)

உலக வரலாறுகளை புரட்டிப் பார்த்தோமேயானால் பணம் எந்தவகையில், எந்த வடிவில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. நாம் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் முதன்முதலில் காலனி ஆதிக்கம் செலுத்தியதிலிருந்து சுதந்திரம் அடைந்தது வரை பணம் புழக்கத்திலிருந்ததையும் எப்படியெல்லாம் மாற்று உரு பெற்றதையும் பார்க்கலாமா?…

முதன் முதலில் பிரிடிஷ் இந்தியர்கள் விக்டோரியா போர்ட்ரைட் (‘Victoria Portrait’) என்று தொடர்ச்சியாக 10, 20,50,100,100 நோட்டுகளை வெளியிட்டார்கள், இது பார்ப்பதற்கு ஒரே மாதிரியான தோற்றத்துடனும், இரண்டு மொழிகளில் அச்சிடப்பட்டும், கையில் மடிக்ககூடியதாகவும் இருந்தது. அதனுடைய பாதுகாப்பை கருத்தில்கொண்டு வாட்டர்மார்க்கில் கவர்ன்மெண்ட் ஆஃப் இந்தியா மற்றும் இரண்டு கையெழுத்துடனும், பதிவுசெய்யப்பட்ட பிரிண்ட் காணப்பட்டன.

பிரிடிஷ் இந்தியா வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும்போது பாதுகாப்பு கருதி inter-spatial என்ற முறைய halfnote பயண்படுத்தினர், அதாவது முதலில் பாதியாக கிழிக்கப்பட்டு முதல் பாதி நோட்டு அனுப்பப்படும், பின்னர் அது கிடைத்தது உறுதிசெய்யப்பட்டபிறகு ரிஜிஸ்டரேஷன் எண் வைத்து இரண்டாவது பாதி அனுப்பப்பட்டு பணத்தை பெறுபவரிடம் ரிஜிஸ்டரேஷன் எண் சரிபார்க்கப்பட்டு விநியோகிக்கப்படும்.
1917 நவம்பர் 30ம் தேதி சிறிய பிரிவு நோட்டு என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி 1 ரூபாய் மற்றும் 2 ரூபாய் அன்னாஸ் எய்ட் (Rupees Two and Annas Eight)ஆகிய நோட்டுக்களை வெளியிட்டது. நாளடைவில் இதை அதிகளவில் புழக்கத்தில் இல்லாமல் போகவே 1920 ஜனவரி 1 ல் நிறுத்தப்பட்டது.

1923‍ம் வருடம் ‘King’s Portrait’ என்ற முறையில் கொஞ்சம் மாற்றி அமைத்து color code அடிப்படையில் வெளியிடப்பட்டது. பிறகு 1923ம் வருடம் மே மாதம் portrait of George V என்ற முறையை அறிமுகப்படுத்தி நிறைய மாற்றங்கள் செய்து 5,10,50,100,500,1000,10000 நோட்டுக்கள் அறிமுகப்பத்தி அதை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தன் கட்டுக்குள் வைத்திருந்தது. 50 Rupees

1940 ஆகஸ்ட் உலக போரின்போது மீண்டும் 1, 2 ரூபாய் காயின்களை அறிமுகப்படுத்தியது முதன் முதலில் செக்யூரிட்டி ஃப்யூச்சரை கருத்தில் கொண்டு State Bank of India நோட்டுகளை அறிமுகப்படுத்தியது

இது இந்தியா சுதந்திரம் அடைந்தும் (1947), இந்தியா குடியரசு நாடாக பிரகடணப்படுத்தும் வரையிலும் புழக்கத்தில் இருந்தன‌

இதுக்கிடையிலே நாம் நினைப்பதற்கு மாறாக ரூபாய் நோட்டுகள் காகிதத்தால் ஆனவை அல்ல. இன்றைக்கு நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் பருத்தி, பருத்திக் கழிவால் உருவாக்கப்படுகின்றன.

$ இந்தியாவில் 18-ம் நூற்றாண்டில் காகித ரூபாய் புழக்கத்தில் இருந்தது. அப்போது இந்துஸ்தான் வங்கி, வங்காள வங்கி, பம்பாய் வங்கி, சென்னை வங்கி ஆகிய நான்கு தனியார் வங்கிகள் காகித ரூபாய்களை அச்சிட்டு வெளியிட்டுவந்தன. 1861-ம் ஆண்டுக்குப் பிறகு அரசு மட்டுமே காகித ரூபாய்களை வெளியிடலாம் என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டு தனியார் காகித ரூபாய்கள் தடை செய்யப்பட்டன.

$ நாட்டின் அதிகாரபூர்வ முதல் காகித ரூபாயை மத்திய ரிசர்வ் வங்கி 1938-ம் ஆண்டு ஜனவரியில் வெளியிட்டது. அந்த 5 ரூபாயில் பிரிட்டன் மன்னர் நான்காம் ஜார்ஜின் படம் இடம்பெற்றிருந்தது.

$ மத்திய ரிசர்வ் வங்கி இதுவரை அச்சிட்டதிலேயே அதிகபட்ச மதிப்புகொண்டது 10,000 ரூபாய் நோட்டு. அது 1938, 1954-ம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டது. ஆனால், இடையில் 1946, 1978-ம் ஆண்டுகளில் இவை மதிப்பற்றவையாக அறிவிக்கப்பட்டன. 1934-ல் இயற்றப்பட்ட ரிசர்வ் வங்கிச் சட்டத்தின்படி 10,000 ரூபாய்க்கு மேல் காகித ரூபாய் நோட்டை அச்சிட முடியாது.

$ மக்களின் பொதுப் புழக்கத்துக்காக 500 ரூபாய் நோட்டு 1987-ம் ஆண்டும், 1000 ரூபாய் நோட்டு 2000-ம் ஆண்டும் வெளியிடப்பட்டன.

$ ஒவ்வொரு ரூபாய் நோட்டின் இடது கைப் பக்கத்தில் தூக்கலாகச் செதுக்கப்பட்ட ஏதாவது ஒரு வடிவம் இருக்கும். ஆயிரம் ரூபாயில் வைரம், 500 ரூபாயில் வட்டம், 100 ரூபாயில் முக்கோணம், ரூ. 50-ல் சதுரம், ரூ. 20-ல் செவ்வகம், ரூ. 10-ல் எந்த வடிவமும் இருக்காது. இந்த வடிவங்களைத் தடவிப் பார்த்தே பார்வையற்றவர்கள் ரூபாயின் மதிப்பை அறிகிறார்கள்.

$ நாசிக் (மகாராஷ்டிரம்), தேவாஸ் (மத்திய பிரதேசம்), மைசூர் (கர்நாடகம்), சல்பானி (மேற்கு வங்கம்) ஆகிய நான்கு இடங்களில் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் அச்சகங்கள் உள்ளன.

எக்ஸ்ட்ரா காயின் தகவல்:

$ 1957-ல்தான் இந்திய நாணயங்கள் 100 பைசாக்களைக் கொண்ட ஒரு ரூபாய் என மாற்றப்பட்டது. அதற்கு முன் 16 அணாக்கள்தான் ஒரு ரூபாய். ஒரு அணா என்பது 4 பைசாக்களுக்குச் சமம்.

$ 75, 150, 1000 ரூபாயிலும் நாணயங்கள் இருக்கின்றன தெரியுமா? 2010-ம் ஆண்டில் பல்வேறு நினைவு நாட்களைக் கொண்டாட மேற்கண்ட மதிப்புகளில் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், இவை பொதுப் பயன்பாட்டுக்கானவை அல்ல.

ரிசர்வ் வங்கியின் 75-வது ஆண்டு விழா, ரவீந்திரநாத் தாகூரின் 150-வது ஆண்டு விழா, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலின் 1000-வது ஆண்டு விழாக்களை கொண்டாடும் வகையில் இந்த நாணயங்கள் வெளியாயின. நாணயம் சேகரிப்பவர்கள், நாணயச் சாலைகளுக்கு விண்ணப்பித்து இவற்றை வாங்கிக்கொள்ள முடியும்.

$ 2011-ம் ஆண்டு நாணயச் சட்டத்தின்படி 1000 ரூபாய் வரையிலான மதிப்பில் நாணயங்களை வெளியிடலாம்.