இந்திய கரன்சியும் – இடியாப்ப சிக்கல்களும்..!

இந்திய கரன்சியும் – இடியாப்ப சிக்கல்களும்..!

பணம் மட்டும் இருந்தா போதும் இந்தியாவில் எதையும் சாதித்துவிடலாம் என்ற மனிதனின் மன்டைக்கனத்துக்கு ஓங்கி விட்டது தான் இந்த அறை…….கேஷ் ஒண்ணு மட்டும் போதும் இந்த நாட்ல எதை வேண்டுமானாலும் சாதித்துவிடலாம், எப்படி பட்ட ஆளையும் சாதித்துவிடலாம், எந்த ஒரு தீர்ப்பையும் விலை கொடுத்து வாங்கலாம்னு நினைச்சா ஆட்களுக்கு ஓவர் நைட்ல பதுக்கி வைத்த லஷ்மி வடிவ கரென்சி விட்டுல இருக்கும் பழைய நியூஸ் பேப்பர் போல ஆனதை சுதாரிக்கவே பல நாட்கள் ஆகின.

ravi nag nov 27

என்ன ஒண்ணு.. வழக்கம் போல் அன்னாடம் காட்சிகள் தான் பாதிக்கபட்டன, எஞ்சியிருந்த சில சொற்ப நோட்டுகளை என்ன செய்வது என்ற பதட்டம் தொற்றி கொண்டு இன்றோடு உலகம் அழிய போகும் அளவுக்கு நினைத்து கூட்டம் கூட்டமாக பேங் சென்று அவன் அவன் பிழைப்பை அவன் அவன் நினைத்து பார்க்க வழக்கம் போல இரண்டாம் தர செல்வந்தர்கள் இதுக்குனு ஒரூ தீர்வு வராதா என்று வழக்கம் போல கொஞ்சம் கேஷ் இருக்கு மாத்த எத்தனை பர்சென்ட் என தன் கருப்பு பணத்துக்கு வெள்ளை சாயம் பூச முனைந்தனர்.

இதுக்கிடையிலே அரசு செய்தது சரியா இல்லையா என யோசித்து பார்க்கும் முன் ஒரு சரியான தீர்வை அரசு எடுத்திருந்தாலும், அதை சரியாக செய்ய தவறான நாடு இந்தியா என்பதை உணரவில்லை….மூச்சு பிடிப்புக்கு பைபாஸ் சர்ஜரி செய்த கதை தான் இந்த சர்ஜிக்கல்  ஸ்ட்ரைக். அரசு நினைத்தது என்ன? நடந்தது என்ன?

ஏற்கனவே செப்டம்பர் 30க்குள் கருப்பு பணம் மாற்ற கடைசி நாள் என்ற அறிவிப்பு வந்த பிறகு கதறிகிட்டு வந்து பணத்தை கொட்டுவாங்கன்னு நினைச்ச இந்திய அரசுக்கு யானை பசிக்கு சோளப்பொறி கொடுத்த மாதிரி கொடுத்த விளம்பர காசுக்கு கூட பிரயோஜனம் இல்லை என்றானது. அதை கொஞ்சம் லேட்டாக உணர்ந்து மீசையில் மண் ஒட்ட கூடாது என்று எடுத்த தடாலடி விஷயம் தான் இந்த பண மாற்றம். இந்தியாவின் சாபம் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் என்ற எழுதப்படாத விதிகளால் பாதிக்கபட்டது சிறிய வியாபரிகளும் சரியா டேக்ஸ் கட்றவனும் தான்.

கறுப்பு பணம் வச்சிருக்கும் அத்தனை ஆட்களுக்கு சரியான பேக்கப்பாக வெள்ளை கையிருப்பு, சொத்துகளும் அதன் வாடகைகளும் அவர்களை அடுத்த சில வருடங்களுக்கு அவர்களை ஒன்று செய்து விட முடியாது என்ற உண்மை அரசு சற்று லேட்டாக தான் உணர்த்தியது. எல்லா கருப்பு பணக்காரர்களும் நன்கு அறிந்த ஒன்று 40% வெள்ளை மற்றும் 60% கறுப்பு டெர்ம்ஸில் தான் வாழ்கின்றனர். இன்றைய நிலைமையில் 100% கருப்பு பணமாக மாத்தி வைத்திருக்கும் ஒரே ஆட்கள் நிலத்தை ஐடிகம்பெனிக்கு வித்த அப்பாவி விவசாயிகள் தான். அதனால் அரசின் இந்த நிலைப்பாட்டை கண்டிப்பாக மறு பரிசீலனை செய்யும் நாட்கள் வெகு துரமில்லை.

கறுப்பு பணத்தை உண்மையில் அரசு அடக்க அதிகம் யோசிக்கவேண்டியது இல்லை நாட்டின் மீது உண்மையான அக்கரை உள்ல சில ஆயிரம் அதிகாரிகளும் ஒரு டஜன் உண்மையான அரசியல் வாதிகளும் போதுமானதே தவிர இந்த கொக்கை பிடித்து அதன் தலை மேல் வெண்ணெய் வைத்து அப்புறம் அதை பிடிக்க நினைப்பது கொஞ்சம் அல்ல இன்னும் ஒரு வருஷம் ஆனாலும் அதை முடிக்கமுடியாது.

கட்டாயமா ஆதார் அட்டை மற்றும் பேன் கார்ட் கொண்டு வந்தாதான் பணம்னு ஒரு பேப்பரை ஃபில் செய்ய வைத்து பணத்தை மாற்ற முடியும்னு கொண்டு வந்த இரண்டே நாட்கள் பேங்க் கருப்பு ஆடுகள் இது சும்மா லுல்லுலாயி அதனால் அவங்க அவங்க கருப்பு ஆடு ஆசாமிகளுக்கு சமிக்ஞ்சை தர உடனே கருப்பு பணம் தன் பணியாளர் அவன் இவன்ன்னு மாத்த மாத்த அரசு நினைத்த அதாக் பிளானுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. அப்புறம் முதல்ல இருந்து ஆரம்பிக்கும் கையில மைனு இல்லிட்டரேட் முரையை கொண்டுவந்து ஆப்பு வைக்க நினைத்தாலும் 125 கோடி பேர் 2000 மாத்தினா எம்புட்டுதான் பார்ப்போம்னு நினைச்ச அரசுக்கு தெளிய தெளிய வைச்சு ஆப்பு அடிக்க தான் தப்பான மக்கள் இருக்கின்றனே தவிர இது முடிவை நோக்கி செல்வதற்க்கதில்லை.

பேங்க்ல லோன் கிடைக்காது அதனால் நம்ம கஸ்டமர் ஒருத்தர் நான் சொன்னா கொஞ்சம் ஃபிளக்ஸிபல் டெர்மில் லோன் தருவாங்க பாஸ் போய் பாருங்கன்னு சொல்ற பாங்க் அதிகாரிகள் அதிக அளவில் இருக்கும் நாட்டில் ஒவ்வொரு வியாழன் இரவும் ஒவ்வொரு லேப்பில் சுமார் 800 – 1200 கோடி கேஷாக பணபறிமாற்றம் செய்யப்படும் சினிமா துறை இரூக்கும் நாட்டில்…..ஒவ்வொரு நாளும் 3000 -4380 கோடி தங்க நகைகள் கேஷாக வாங்கும் நாட்டில்…….. கேஷ் கொடுங்க அக்கவுன்ட்ல வரவு வச்சி தரேன்னு சொல்லும் துபாய் வங்கி முதல் ஸ்விஸ் வங்கிகள் வரை கோணிப்பைகளை வீட்லயே பிக்கப் பண்ணி ஓவர் நைட்ல ஓவர்ஸீஸ் அக்கவுன்ட்ல வரவு வைக்கும் ஏஜன்டுகள் இருக்கும் வரை பாதிக்கபடபோவது சிறூ சிறு வணிகர்கள் மற்றும் அன்றாடம் காய்ச்சிகள் தான். அரசே இஞ்சியை தின்ன எஃபக்டில் தான் இருக்கு ஆனா அடுத்த அப்ரோச் என்னவாக இருக்கும் என்பது தான் அனைவரும் எதிர்பார்ப்பே……!

error: Content is protected !!