இந்தியன் பேங்கில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com

இந்தியன் பேங்கில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஜாப் ரெடி!

பொதுத்துறை வங்கிகளில் இந்தியன் வங்கியும் ஒன்று. நுாற்றாண்டுகளை கடந்து இயங்கி வருகிறது. தமிழகத்தின் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது. நாடு முழுவதும் 2500க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. சிறப்பு வாய்ந்த இவ்வங்கியில் விளையாட்டு வீரர்களுக்கான, 21 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



காலியிடங்கள்:
 கூடைப்பந்து வீரர்களுக்கு 6ம், கிரிக்கெட் வீரர்களுக்கு 7ம், வாலிபால் வீரர்களுக்கு 5ம், ஹாக்கி வீரர்களுக்கு 3ம் என மொத்தம் 21 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பிரிவுகள் : தேர்வு செய்யப்படுபவர்கள் ஆபிசர் ஜே.எம்.ஜி – ஸ்கேல் 1 மற்றும் கிளார்க் பிரிவுகளில் பணியமர்த்தப்படுவர்.

வயது
 : 2018 ஜன., 1 அடிப்படையில் 18 முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி
: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ஆபிசர் பதவிக்கு கிரிக்கெட் விளையாட்டில் தேசிய அணியில் அல்லது ரஞ்சி அல்லது துலீப் டிராபி ஆகிய போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். கிளார்க் பணியிடங்களுக்கு தேசிய அளவில் அல்லது மாவட்ட அளவில் அல்லது பல்கலை அளவில் விளையாடி இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை:
 சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி, போட்டி திறன், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: வங்கி இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Assistant General Manager (HRM), HRM Department, Corporate Office, Indian Bank 254- 260 Avvai Shanmugham Salai, Chennai, Tamil Nadu — 600 014

கடைசிநாள்:
 2018 மார்ச் 3.

விபரங்களுக்கு :  ஆந்தை வேலைவாய்ப்பு