அமெரிக்காவில் அப்பீல் கோர்ட் நீதிபதியானார் இந்திய பெண்மணி!

அமெரிக்காவில் அப்பீல் கோர்ட் நீதிபதியானார் இந்திய பெண்மணி!

அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கிடையே அரசியல் மற்றும் பாதுகாப்புத்துறையில் இணக்கமான உறவு இருந்து வரும் நிலையில், இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அதே சமயம் இந்திய-அமெரிக்கரும் பிரபல வழக்கறிஞருமான நியோமி ஜெஹாங்கிர் ராவ் (45) அமெரிக்காவின் சர்க்யூட் நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

உலக நாடுகளின் பெரியண்ணா என்று தன்னை விளித்துக் கொள்ளும் அமெரிக்காவின் கொலம்பியா மாவட்டத்துக்கான சர்க்யூட் கோர்ட் ஆப் அப்பீல்ஸ் நீதிபதியாக இருந்த பிரெட் கவனாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார் அதிபர் டொனால்டு ட்ரம்ப். இதையடுத்து அவருக்கு பதில் நியோமி ஜெஹாங்கிர் ராவ் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ராவுக்கு அமெரிக் உச்ச நீதிமன்ற நீதிபதி கிளாரன்ஸ் தாமஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார். இந்திய-அமெரிக்கரான ராவ் இதற்கு முன்பு வழக்கறிஞராகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்தபடியாக சக்தி வாய்ந்த நீதிமன்றமாக கருதப்படும் சர்க்யூட் கோர்ட் ஆப் அப்பீல்ஸில் நீதிபதியாக பதவியேற்ற 2-வது இந்தியர் என்ற பெருமை ராவுக்கு கிடைத்துள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவில் ஒபாமா அதிபராக இருந்தபோது இந்தியரான சீனிவாசன் சர்க்யூட் நீதிபதியாக பொறுப்பேற்றாராக்கும்.

Related Posts

error: Content is protected !!