இந்தியன் ஏர்ஃபோர்சில் சிவிலியன் ஜாப் இருக்குது! – AanthaiReporter.Com

இந்தியன் ஏர்ஃபோர்சில் சிவிலியன் ஜாப் இருக்குது!

இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில், விமானப்படை முக்கிய பங்கு வகிக்கிறது. நவீன தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவைகளுக்காக உலகளவில் அறியப் படுகிறது. பெருமைக்குரிய இப்படையில் காலியாக உள்ள 143 சிவிலியன் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

என்னென்ன இடங்கள்: கிரேடு 2 டிராப்ட்ஸ்மேன், லோயர் டிவிஷன் கிளார்க், இந்தி டைப்பிஸ்ட், காப்பர் ஸ்மித் அண்டு ஷீட் மெட்டல் ஒர்க்கர், கார்பென்டர், பெயின்டர், ஏ.சி., மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் ரிப்பேர், டெய்லர், குக், லாண்டரிமேன், மெஸ் ஸ்டாப், மல்டி டாஸ்கிங் ஸ்டாப், ஹவுஸ் கீப்பிங் ஸ்டாப் ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

வயது: விண்ணப்ப தாரர்கள் 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: டெக்னிக்கல் பதவி களுக்கு உரிய பிரிவில், டெக்னிக்கல் தகுதிகளும் அனுபவமும் தேவைப் படும். கிளரிக்கல் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம், பிளஸ் 2 அளவிலான படிப்பு முடித்திருப்பது தேவைப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து விண்ணப்பிக்கும் பகுதிக்கு ஏற்ற, ஏர்போர்ஸ் ஸ்டேஷனின் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கடைசி நாள்: 2018 ஏப்., 29.

விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு