இந்தியாவுலே மால்வேர் அட்டாக் அதிகரிச்சிக்கிடே போவுதாம்!

இந்தியாவுலே மால்வேர் அட்டாக்  அதிகரிச்சிக்கிடே போவுதாம்!

உலகின் பிரபல தேடுதல் பிரசவுசரான கூகுள் டாட் காம், பாதுகாப்பாற்ற, பெரும்பாலும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என கூகுளின் பாதுகாப்பான் பிரவுசர் பக்கத்திலேயே (Safe Browsing Site Status page.) முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது. குரோம் பிரவுசரின் பின்புலத்தில் பாதுகாப்பற்ற இணையதளங்களை, பயன்பாட்டாளர்களுக்கு தெரிவிக்கும் வசதி உள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்புகள் கூகுள் தேடல் மற்றும் வெப் பேஜ்களிலும் பாதுகாப்பை உறுதி செய்யும் போது வருகிறது.

கூகுள் டாட் காமின் பாதுகாப்பு தளங்களிலேயே இதில் உள்ள சில இணையதள பக்கங்கள் பாதுகாப்பற்றது எனவும் அந்த இணைய தளங்கள் வழியாக எளிதில் கம்ப்யூட்டருக்குள் ஊடுருவலாளர்கள் வரக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
malware may 6
இவற்றை பயன்படுத்தி உங்களின் ரகசிய குறியீடுகள், தகவல்கள் அல்லது கிரெடிட் கார்டு தகவல்களை திருட வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கூகுள் மூலம் தேடப்படும் பல இணையதங்களில் மால்வேர், ஆட்வேர் உள்ளிட்ட ஆபத்தை விளைவிக்கக் கூடிய சாப்ட்வேர்கள் உள்ளனவாம்.

கம்ப்யூட்டர்கள் மட்டுமல்ல, ஆன்ட்ராய்டு மொபைல்களில் குரோம் இணையதளம் பயன்படுத்துபவர்களுக்கும் இதே பிரச்னை வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கூகுளின் பாதுகாப்பு பிரவுசர், பயர்பாக்ஸ், சபாரி போன்ற பிரவுசர்களிலும் உள்ளது. கூகுளின் ஆபத்தான இணையதளங்கள் பட்டியல் பற்றிய விபரங்கள் இவற்றிலும் உள்ளது. இதனால் கூகுள் பயன்படுத்துபவர்கள், விஷமிகள். ஊடுருவலாளர்கள் யாரும் எளிதில் ஊடுருவ முடியாதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் கம்ப்யூட்டர் மால்வேர் புரோகிராம்கள் பல நாடுகளின் ராணுவத்திற்கு சவாலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் உளவு ஏஜென்ஸியான ஐ.எஸ்.ஐ. இந்திய ராணுவத்தின் முக்கிய தகவல்களை திருடுவதற்காக சில மொபைல் அப்ளிகேஷன்களில் மால்வேர்களை பரப்புவது உறுதியாகியுள்ளது. இதுதவிர, அவ்வபோது பாகிஸ்தான் ஹேக்கர்கள் இந்திய அரசின் முக்கிய இணைய தளங்களையும், பிரபலங்களின் இணையதளங்களையும் முடக்கி இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை பாகிஸ்தான் கொடியுடன் போஸ்ட் செய்து வருவதும் வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாடுகள் அதிக அளவில் மால்வேர் தாக்குதல்களுக்கு ஆளாகி வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செக்யூரிட்டி இண்டலிஜென்ஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் பாதியளவு தாக்குதல்கள் ஆசியாவில் இருந்தே தொடுக்கப்படுவதாகவும், 5-ல் ஒரு பகுதி லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் தனது ஆன்டி-மால்வேர் சாப்ட்வேரில் உள்ள சென்சார்களின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு கோடி மால்வேர் தாக்குதல்களை உலகமெங்கும் கண்டறிவதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஜப்பான், பின்லாந்து, நார்வே, சுவீடன் நாடுகளில் மால்வேர் தாக்குதல்கள் குறைவாகவே காணப்படுகிறது.

error: Content is protected !!