விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 44 ராக்கெட்!

விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 44 ராக்கெட்!

இந்திய ராணுவத்தின் பிரத்யேகப் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட ‘மைக்ரோசாட்–ஆர்’ செயற்கைகோள், ஹாம் ரேடியோ சேவைக்கான ‘கலாம் சாட்’ செயற்கைகோளை சுமந்துக் கொண்டு பிஎஸ்எல்வி சி–44 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

நம் நாட்டின் முக்கிய தேவையான ராணுவ தொலைத் தொடர்பு, தொலையுணர்வு, வழிக்காட்டுதல் செயற்கை கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்து, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் விண்வெளியில் நிலைநிறுத்தி வருகிறது.

மேலும், வர்த்தக ரீதியில் 239 செயற்கைகோள்களையும் விண்ணில் இஸ்ரோ நிலை நிறுத்தி uள்ளது. இதற்கிடையில், ராணுவ பயன்பாடு மற்றும் எல்லை கண்காணிப்புக்காக ‘மைக்ரோசாட்–ஆர்’ செயற்கைகோளை இஸ்ரோ தயாரித்தது. 744 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோளுடன், ஹாம் ரேடியோ சேவைக்காக, ஸ்பேஸ் கிட்ஸ் இந்திய அமைப்பு மற்றும் ரிபாத் ஷாரூக், ஸ்ரீமதி கேசன் உள்ளிட்ட மாணவர்கள் உருவாக்கிய ஒரு கிலோ 200 கிராம் எடைகொண்ட ‘கலாம்சாட்’ செயற்கைகோளையும் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டது.

இதைத்தொடர்ந்து, பிஎஸ்எல்வி சி–44 ரக ராக்கெட்கள் மூலம் மைக்ரோசாட்–ஆர் மற்றும் கலாம்சாட் செயற்கைகோளை ஜனவரி 24ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது. இதற்கான கவுன்ட் டவுண் ஜனவரி ௨3ம் தேதி இரவு ௭.௩௭ மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி–44 ராக்கெட் நேற்று நள்ளிரவு 11.40 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பிஎஸ்எல்வி சி–44 ராக்கெட் 44.4 மீட்டர் நீளம் கொண்டது. 4 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட் டின் முதல் நிலையில், 139 டன் திட எரிபொருள் நிரப்பப்பட்டது. 2வது நிலையில், 42 டன் திரவ எரிபொருள் கொண்ட ‘விகாஸ்’ இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. 2வது நிலையில, 7.65 டன் எடை கொண்ட ராக்கெட் மோட்டார் பொருத்தப்பட்டிருந்தது. ௪வது நிலையில், திரவ எரிபொருள் கொண்ட இரண்டு ராக்கெட் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருந்தன.

பூமியில் இருந்து புறப்பட்ட 13 நிமிடம் 30 வினாடி, 247.12 கி.மீட்டர் துாரத்தில் ராக்கெட்டின் பிஎஸ் எல் இன்ஜின் கட்ஆப் செய்யப்பட்டது. அப்போது, ராணுவ பயன்பாட்டுக்காக இஸ்ரோ உருவாக்கிய ‘மைக்ரோசாட்–ஆர்’ செயற்கைகோள் விடுவிக்கப்பட்டு, திட்டமிட்டப்படி புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பட்டது.இதில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து, பிஎஸ் ௪ இன்ஜின் இரண்டு முறை கட் ஆப் செய்யப்பட்டு மேலே கொண்டு செல்லப் பட்டது. தொடர்ந்து, 450 கி.மீட்டர் துாரம் சென்றவுடன் ‘கலாம்சாட்’ செயற்கைகோள் திட்டமிட்டபடி புவி வட்டபாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

* பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இஸ்ரோ இதுவரையில்  உள்நாட்டு செயற்கைகோளையும், வணிகரீதியாக 239 வெளிநாட்டு செயற்கை கோளையும் விண்ணில் ஏவியுள்ளது. பிஎஸ்எல்வி சி–44  ராக்கெட், பிஎஸ்எல்வி ரகத்தின் ௪௬வது ராக்கெட்டாகும். இது இந்த ஆண்டில் முதல் திட்டமாகும்.

* பிஎஸ்எல்வி சி–44 ராக்கெட்டின் பிஎஸ்எல்வி –டி.எல் எனும் புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது, புவி வட்டபாதையை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

*வழக்கமாக அதிக எடைக் கொண்ட செயற்கை கோளில் எடைக்கு ஏற்றார் போல், சிறிய வகை யிலான 6 பூஸ்டர்கள் பொருத்தப்படும். ஆனால், பிஎஸ்எல்வி–டி.எல் எனும் புதிய தொழில் நுட்பத்தின் மூலம் குறைந்த எடைக்கொண்ட 2 செயற்கை கோள் அனுப்பப்பட்டதால் 2 பூஸ்டர்கள் மட்டுமே பொருத்தப்பட்டு இருந்தது.

ராக்கெட்டின் 4வது நிலையான பிஎஸ்–4 வழக்கமாக பயன்படுத்தப்படாது. செயற்கை கோள்கள் நிலைநிறுத்தப்பட்டவுடன், பிஎஸ்–4 பயனற்று சுற்றிக் கொண்டு இருக்கும். ஆனால், இப்போது பிஎஸ்– 4 நிலையில் எரிபொருட்கள் நிரப்பட்டு, அதில் கலாம் சாட் செயற்கை கோள் இணைக்கப் பட்டுள்ளது. இதுபோன்ற செயல்முறை உலகில் முதல் முறையாக இஸ்ரோ கையாண்டுள்ளது. பிஎஸ்–4 புவியின் முழு வட்டபாதையை சுற்றிவரும். எரிபொருள் தீர்ந்தவுடன் கலாம் சாட் பயன்பாடும் நின்றுவிடும்.

இதையடுத்து, இஸ்ரோ தலைவர் சிவன் பேசிய போது, “புவிபரப்பை கண்காணிக்க 2 செயற்கை கோள்கள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. மைக்ரோ சாட் செயற்கை கோள் நாட்டின் எல்லையை கண்காணிக்க பயன்படும். மாணவர்கள் அறிவியல் பரிசோதனை செய்ய, இந்த செயற்கை கோள்கள் உதவியாக இருக்கும்.

மாணவர்கள் தயாரித்த கலாம் சாட் என்பது சென்னையைச் சேர்ந்த தனியார் அமைப்பான ஸ்பேஸ் கிட்ஸின் தயாரிப்பாகும். உலகில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களிலேயே மிகவும் எடை குறைவானதாக கருதப்படும் கலாம் சாட் செயற்கைக்கோளின் எடை ஒரு கிலோ 260 கிராமாகும். ஆறு வருட உழைப்பில் உருவானது என்றாலும் 12 லட்ச ரூபாய் செலவில் 6 நாட்களில் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள் இது.

ரிபத் ஷாரூக் தலைமையிலான தமிழக உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வடிவமைத்த இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ கட்டணம் ஏதும் வசூலிக்கவில்லை. ஹாம் ரேடியோ சேவைக்காக அனுப்பப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோளின் ஆயுள் 2 மாதங்களாகும்.

இந்த மாணவர்கள் கச்சிதமாக செயற்கைக்கோளை வடிவமைத்துள்ள விதம் பிரமிப்பானது. நாங்கள் மற்றவர்களுக்கு கை கொடுப்போம் என அடிக்கடி இஸ்ரோ கூறும். இவர்களைப் பார்த்த பின்பு எதிர்காலத்தில் இவர்கள்தான் எங்களுக்கு கை கொடுப்பார்கள் என கூறத் தோன்றுகிறது.

எந்த ஒரு தயக்கமும் இல்லாமல், மாணவர்கள் தங்களின் அறிவியல் ஆராய்ச்சியை செய்யுங்கள். உங்களுக்கு இஸ்ரோ எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

சிறிய செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த, சிறிய வகை ராக்கெட்(எஸ்எஸ்எல்வி) இந்த ஆண்டு விண்ணில் ஏவப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. சந்திராயன்–2 ஏப்ரலில் விண்ணில் ஏவப்படும் திட்டமிட்டுள்ளது. உலகில் முதல் முறையாக பிஎஸ்–4ல் செயற்கை கோளை வைத்துள்ளது.மாணவர்களின் தளமாக பிஎஸ்4 ஐ இஸ்ரோ பயன்படுத்தும்”இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts

error: Content is protected !!