அறிவுசார் சொத்துக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 44ஆவது இடம்! – AanthaiReporter.Com

அறிவுசார் சொத்துக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 44ஆவது இடம்!

இந்திய வரலாற்றின் உருவாக்கத்தில் தாவரங்கள் மிக முக்கியப் பங்கை வகித்து இருக்கின்றன. குறுமிளகு, கிராம்பு, அகில் மற்றும் சந்தனம் ஆகியவற்றைத் தேடிவந்த வெளிநாட்டு வணிகர்கள், வாசனைத் திரவியங்களை அள்ளிக் கொண்டுசென்றதுடன், இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்ததுதான் கடந்த கால வரலாறு. இன்று, பலரும் சாப்பிடும்போது உணவில் இருக்கும் மிளகை அலட்சியமாகத் தூக்கி எறிகின்றனர். அவர்களுக்குத் தெரியாது இந்த மிளகுக்காகத்​தான் இந்தியா அடிமைப்படுத்தப்​பட்டது என்பது. வரலாற்றைக் கற்றுக்கொள்ள கல்வெட்டுக்கள் மட்டும் அல்ல, பொங்கலில் போடப்பட்ட மிளகும் உதவக்கூடும் – இது எழுத்தாளர் எஸ். ராமகிருஷணன் எழுதியது..இதை அப்போது உறுதிப் படுத்துவது போல் ஒரு தகவல் வெளியாகி உள்ளது..அதாவ்து அமெரிக்க தொழில் துறை அமைப்பு வெளியிட்டுள்ள அறிவுசார் சொத்துக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 44ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்க அறிவுசார் சொத்துரிமை ஆலோசனை மையம் மற்றும் உலகளாவிய கொள்கை ஊக்குவிப்பு மையம் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “இந்தியாவின் பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இந்தியாவின் காப்புரிமைச் சூழல் வலுப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ஊக்குவிப்புகள் அதிகரித்துள்ளன. பாதுகாப்பும் அதிகரித்துள்ளது. இதனால் அறிவுசார் சொத்துப் பட்டியலில் இந்த ஆண்டு இந்தியா 44ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் மொத்தமாக 50 நாடுகள் இடம் பெற்றுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து அரசு அதிகாரி ஒருவர் பிசினஸ்லைன் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “தனி நபர்களாலும், தனியார் நிறுவனங்களாலும் பல்வேறு ஆய்வுகளும், மதிப்பீடுகளும் வெளியிடப்படுகின்றன. இந்த ஆய்வறிக்கைகளை அரசாங்கம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்வதில்லை. கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இந்தியா 45ஆவது இடத்திலும், அதற்கு முந்தைய ஆண்டில் 43ஆவது இடத்திலும் இருந்தது. இந்த ஆய்வை எடுத்துக்கொண்டால் ஒப்பீட்டளவில் நம்முடைய திறன் மேம்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இதனிடையே வரலாறு திரிக்கப்படும், சிதைக்கப்படும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ஆள்பவர்களும் ஆள விரும்புகிறவர்களும் வரலாற்றைத் தங்களின் சுய லாபங்களுக்காகத் திருத்தி எழுதுவதும், தங்களுக்குச் சாதகமாக உருவாக்கிக்கொள்வதும் தொடர்ச்சியாக நடக்கும் மோசடி. மற்ற அறிவுத் துறைகளைவிட வரலாறுதான் அதிக நெருக்கடிகளைச் சந்திக்கிறது. அதிக சர்ச்சைக்கும் சண்டைக்கும் காரணமாக இருக்கிறது. காலத்தின் மனசாட்சியாக வரலாறு இருப்பது அதிகாரத்தில் இருப்பவர்களில் பலருக்கு உறுத்தலாக இருக்கிறது. வரலாற்றை முற்றிலும் அழித்துவிட முடியாது என்பதால், அதை திரித்துக் கூறுவதில் அக்கறை காட்டுகிறார்கள்.

வரலாற்றைப் பாதுகாக்க முக்கியத் தேவை மொழியைப் பாதுகாப்பதே. மொழி என்பது வெறும் பரிவர்த்தனைக்கான வாகனம் மட்டும் அல்ல. அதுதான் வரலாற்றின் ஆதாரம். கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் சுவடிகளிலும் பதிவுசெய்யப்பட்ட வரலாறுகளே, கடந்த காலத்தை இன்று நாம் புரிந்துகொள்ள உதவுகின்றன. வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதில் எப்போதுமே நாம் அக்கறை இல்லாதவர்களாகவே இருக்கிறோம் என்ற மேற்படி எஸ். ரா. எழுதியவற்றை நினைவூட்ட கடைமைப்பட்டுளோம்.