வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தோனி இல்லாத இந்திய அணி அறிவிப்பு!

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தோனி இல்லாத இந்திய அணி அறிவிப்பு!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர். இந்த அணியில் விக்கெட் கீப்பரும் முன்ணாள் கேப்டனுமான தோனி இடம் பெறவில்லை. தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் இந்திய – மே.இ.தீவுகள் இடையே அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் தலா 3 ஒரு நாள், 3 டி20 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. ஒரு நாள் தொடர் ஆகஸ்ட் 3-ல் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியின் ஒரு பகுதியாக 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் ஆகஸ்ட் 22-ல் தொடங்குகிறது. முதலில் 3 போட்டிகள் அடங்கிய டி 20 தொடரில், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ப்ரோவார்ட் கவுன்டி மைதானத்தில் ஆகஸ்டு 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முதல் 2 போட்டிகளும், கயானாவில் ஆகஸ்டு 6-ஆம் தேதி 3-வது போட்டியும் நடைபெறவுள்ளது.

பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், ஆகஸ்டு 8-ல் கயானாவிலும், 11 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ட்ரினிடட்டிலும் இப்போட்டிகள் நடைபெறும்.இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஆண்டிகுவா விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்டு 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியும், ஜமைக்காவின் சபைனா பார்க்கில் ஆகஸ்டு 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை 2-ஆவது டெஸ்ட் போட்டியும் நடைபெறும்.

இதற்கான அணியை தேர்வு செய்ய மத்திய தேர்வாளர் குழு ஜூலை 19-ஆம் தேதி மும்பையில்கூட இருந்தது. ஆனால், அணித் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்தது.2-ஆம் அறிவிப்பின்படி ஜூலை 21-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மும்பையில் இத்தொடருக்கான இந்திய அணித் தேர்வு செய்யப்பட்டது. அணிகளின் விவரம் பின்வருமாறு:

ஒரு நாள் அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவன், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், கேதர் ஜாதவ், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி.

டி20 அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவன், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), க்ருணால் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராஹுல் சஹர், புவனேஸ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சஹர், நவ்தீப் சைனி.

டெஸ்ட் அணி:

விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே (துணைக் கேப்டன்), மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், புஜாரா, ஹணுமா விஹாரி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா, உமேஷ் யாதவ்.

Related Posts

error: Content is protected !!