எல்லா வகையான போட்டிகளில் இருந்தும் முழுமையாக ஓய்வு! -இர்ஃபான் பதான் அறிவிப்பு!

எல்லா வகையான போட்டிகளில் இருந்தும் முழுமையாக ஓய்வு! -இர்ஃபான் பதான் அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கெட்டின் முழுமையாக ஓய்வு பெறுவதாக 35 வயதான இர்ஃபான் பதான் இன்று (சனிக்கிழமை) அறிவித்தார்.

2003-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இர்ஃபான் பதான் அறிமுகமானார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்தவர் இவர். இந்திய அணியின் பல வெற்றி களுக்கு இர்ஃபான் உறுதுணையாக இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்த இவர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்துக்கு விடை கொடுத்துள்ளார்

இர்ஃபான் பதான் 29 டெஸ்ட், 120 ஒருநாள் மற்றும் 24 டி 20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 301 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 1 சதம் மற்றும் 6 அரை சதங்கள் அடித்து உள்ளார்.

தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பதான், “நான் எனது ரசிகர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் திரும்பி வருவேன் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள். அவர்களின் அன்பு மற்றும் ஆதரவோடு இந்த ஓய்வு என்ற முடிவு எடுத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!